இந்த செய்திதான் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேயக் கடமைக்கான அங்கீகாரம் – முதல்வர் ட்வீட்

கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்கு சிரமபடவில்லை என்ற செய்திதான் கழக செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேய கடமைக்கான அங்கீகாரம் ஆகும். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் சென்று ஆய்வு … Read more

வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! வாழ்த்து தெரிவித்த முதல்வர்..!

வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு  வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உலகத்தமிழ் நிறுவனம் சார்பாக லண்டனில் நான்காவது சர்வதேச மருத்துவ சிறப்பு விருது வழங்கும் விழா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அவரது சார்பில் அவரது மகனும், மருத்துவருமான இளஞ்செழியன் மற்றும் அவரது மருமகள் கிருத்திகா இளஞ்செழியன் … Read more

‘அங்கிள்…அங்கிள்… தண்ணியால நான் வழுக்கி விழுந்திட்டேன்..!’- முதல்வரிடம் முறையிட்ட சிறுவன்..!

ஆவடி பகுதியில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய போது, சிறுவனிடம் உரையாடிய முதல்வர்.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை பெய்ய தொடங்கிய நாளில் இருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு … Read more

#BREAKING : நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புமாறு ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தல்..!

நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை,சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது சந்தித்து பேசினார். அவரிடம், மழை வெல்ல பாதிப்பு குறித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து, நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று ஆளுநரிடம் … Read more

#BREAKING : இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக, சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளும் இழப்புகளை சந்தித்துள்ளனர். இந்நிலையில், மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-யை முதல்வர் … Read more

Connect 2021 கருத்தரங்கை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

CII தொழில் கூட்டமைப்பு  மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து ‘கனெக்ட்’ என்ற தொழில்துறை கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  CII தொழில் கூட்டமைப்பு  மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து ‘கனெக்ட்’ என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கருத்தரங்கில், அரசின் மின் ஆளுமை நிறுவனம் – சென்னை … Read more

இரண்டு நாட்களாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக்குழு இன்று முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை..!

இரண்டு நாட்களாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக்குழு இன்று முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாலும் மக்களின்  இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக தமிழகத்தில்  பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை புரிந்தது. அதன்படி, தமிழகத்தில் ஏற்பட்ட … Read more

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்..!

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யன் அவர்களின் வீரதீரச் செயலினைப் பாராட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யன் அவர்களின் வீரதீரச் செயலினைப் பாராட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‘சட்டம் – ஒழுங்குக்குச் சவால் விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குரிய சூழலை உறுதி செய்வதே … Read more

கோவையில் முதலீட்டாளர் மாநாடு..! ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!

3-வது கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு  நடைபெற்றது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா.ர் நிறைவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை சென்னை கலைவாணர் அரங்கில் … Read more

தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான போட்டியில், தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். நேற்று டெல்லியில், சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த கர்நாடகா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. இதில், தமிழக அணியை சேர்ந்த … Read more