வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா..!

கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகின்ற ஜனவரி 20- ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் டிரம்ப் விரைவில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் காலம் நெருங்கியுள்ளது. இந்நிலையில், இந்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட நினைத்த டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையை தற்போது அலங்கரித்து வருகிறார். வெள்ளை மாளிகையில் செயற்கை … Read more

“தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க டிரம்ப் அரசு போராடி வருகிறது”- மெலனியா டிரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை அனைவருக்கும் கிடைக்க அதிபர் டிரம்ப் அரசு போராடி வருவதாக அவரின் மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருக்கவுள்ளது. இதன்காரணமாக, கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசு தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா … Read more

முதல் பெண்மணியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? மெலனியாவிடம் கேள்வி கேட்ட மாணவர்கள்

அமெரிக்காவின்  முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் டெல்லியில்  உள்ள  அரசுப் பள்ளிக்குச் சென்றபோது, சில மாணவர்கள் , “முதல் பெண்மணியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” ‘அமெரிக்கா எவ்வளவு பெரியது’, ‘இது மிகவும் தொலைவில் உள்ளதா’, ‘உங்களுக்கு பிடித்த கார்ட்டூன் எது’ என்றும் மாணவர்கள் மெலனியாவிடம் கேட்டார்கள்.பின்னர் அவர்  4 ஆம் வகுப்பு மாணவர்களுடன் ‘மகிழ்ச்சி வகுப்பில்’ சிறிது நேரம் தியானம் செய்தார். அதைத் தொடர்ந்து, “நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்” என்று கூறினார்.