முதல் முறையாக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது மகிழ்ச்சி – வைகோ

முக ஸ்டாலினை அனைத்து தகுதிகளையும் கொண்ட வேட்பாளராக பார்க்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒரு கட்சி 12 தொகுதிகள் குறையாமல் போட்டியிட்டால் தான் 5% அடிப்படையில் ஒரு சின்னம் ஒதுக்கப்படும்.

இந்த நெருக்கடியான சூழலில் மற்றும் பிரச்சாரத்துக்கு 12 நாட்கள் உள்ள நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு எடுத்துள்ளோம். மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்யப்படும். ஏனென்றால், இந்துத்துவ கட்சிகள் தமிழக்தில் இந்தி, சமஸ்கிருதத்தை புகுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதால், பாஜகவை அடியோடு ஒழித்துக்கட்ட திமுகவுக்கு முழு ஆதரவையும் தருவோம்.

சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறைக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவதால் மகிழ்ச்சி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முக ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக பார்க்கும்போது, அனைத்து தகுதிகளையும் கொண்ட வேட்பாளராக பார்க்கிறேன் என கூறியுள்ளார். தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு மன நிர்வாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#ElectionBreaking: மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு., உதய சூரியன் சின்னத்தில் போட்டி., ஒப்பந்தம் கையெழுத்தானது.!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுகவுடன் மதிமுக தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியும், அதற்கான முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் திமுக மதிமுகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் சற்று முன் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதனிடையே, ஆரம்பத்தில் மதிமுக தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக நான்கு தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்று கூறியதால், இரு தரப்பிலும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை. ஆகையால், இன்று மீண்டும் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக சற்று முன்னேறி, மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது.

மேலும் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் சற்று நேரத்தில் கையெழுத்தாகும் என்று தகவல் கூறப்பட்ட நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் மதிமுகாவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததற்க்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த 6 தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தனி சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக திமுக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் 6 தொகுதிகளை பெற்றுகொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தில் மதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், மதிமுக தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் திமுகவுடம் கொடுத்துள்ளது. அதன்படி, மதுராந்தகம், நெய்வேலி, திருச்சி, வாசுதேவநல்லூர், கோவில்பட்டி, சாத்தூர், திருப்பூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளின் பட்டியலை மதிமுக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, திமுக கூட்டணியில் இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, மற்றும் தற்போது மதிமுகவுக்கு 6 என மொத்தம் 23 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3-ம் கட்ட பேச்சுவார்த்தை..மதிமுகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு..!

திமுக-மதிமுக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

திமுகவுடன் 2-கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மதிமுகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மதிமுகவிற்கு திமுக தரப்பில் இருந்து 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க விரும்புவதால் தொகுதி பங்கீடு இறுதியாவதில் தொடர்ந்து இழுபறி நடந்து வருகிறது. இதுவரை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 17 இடங்களை ஒதுக்கியுள்ளது. அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் நாங்க சொல்ல முடியாது., 3வது அணிக்கு செல்ல வாய்ப்பே கிடையாது – வைகோ

விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கவுரவமாக நடத்தி வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதிமுக சார்பில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது, திமுக எத்தனை தொகுதிகள் வழங்க முன்வந்துள்ளது என்ற கேள்விக்கு, அதெல்லாம் நாங்க சொல்ல முடியாது என்று வைகோ பதிலளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், மரியாதையும் கொடுப்பது இல்லை என்ற குற்றசாட்டை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய வைகோ, அதுபோன்று குற்றசாட்டு இல்லை என்றும் அதில் உண்மை இல்லை எனவும் கூறி, திமுக மரியாதையாக தான் நடத்துகிறார்கள் என கூறியுள்ளார்.

திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டவுடன் அறிவிக்கிறேன். கமல்ஹாசன் கூறிருப்பது என்பது அது அவருடைய கருத்து, அது தவறான கருத்து விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கவுரவமாக நடத்தி வருகிறது என விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டும் வழங்கியிருப்பது, சமூக நிதிக்கு புறம்பானது என்று கமல் ஹாசன் கூறியதற்கு வைகோ பதிலளித்துள்ளார்.

மேலும், 3வது அணி அமைப்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அதில் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, 3வது அணிக்கு செல்ல வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக வைகோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி பங்கீடு இழுபறி…நாளை மதிமுக ஆலோசனை..!

மதிமுக நாளை சார்பில் உயர்நிலை கூட்டம் நடைபெறஉள்ளது.

திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று 2-ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா, அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக மீண்டும் அழைக்கும் என்று தெரிவித்தார். கடந்த பேச்சு வார்த்தையின்போது திமுக தரப்பில் என்ன சொன்னார்களோ அதை தான் இப்போதும் சொன்னார்கள் என தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், நாளை மதிமுக சார்பில் உயர்நிலை கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 இடங்களை ஒதுக்கியுள்ளது. அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை என்ன சொன்னார்களோ அதை தான் இப்போதும் சொன்னார்கள்- மல்லை சத்யா..!

அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக மீண்டும் அழைக்கும் என்று மல்லை சத்யா தெரிவித்தார்.

திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், இன்று   2-ம்  கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேர்தல் பணிச் செயலர் அந்திரிதாஸ் மற்றும் சின்னப்பா, செந்தில் அதிபன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில்  திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா, அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக மீண்டும் அழைக்கும் என்று தெரிவித்தார். கடந்த பேச்சு வார்த்தையின்போது திமுக தரப்பில் என்ன சொன்னார்களோ அதை தான் இப்போதும் சொன்னார்கள். மதிமுகவுக்கானஅங்கீகாரத்தை தரவேண்டுமென திமுகவிடம் கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.

 

 

#Latest Update:இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அறிவாலயம் வந்த மதிமுக

Vaiko

திமுகவுடன் இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மதிமுக தலைவர்கள்  அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர்.

மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ,தேர்தல் பணிச் செயலர் அந்திரிதாஸ் மற்றும் சின்னப்பா ,செந்தில் அதிபன் ஆகியோர் அறிவாலயம் வந்துள்ளனர் .

மதிமுக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குமாறும் தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கூறிவந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக தனது கூட்டணி காட்சிகளுக்கு இதுவரை 11 இடங்களை ஒதுக்கியுள்ளது.இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க கோரிக்கை வைத்த நிலையில், திமுக 6 தொகுதிகள் வரை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர் இழுபறி., இன்று இரவுக்குள் திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம்.!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் மதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து தொகுதி பணங்கிடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது.

இம்மாதம் 12ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான நாள் தொடங்குகிறது. அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய அவசியம் பிரதான கட்சிகளுக்கு உள்ளது. இந்நிலையில் இன்று இரவுக்குள் திமுகவுடன் தொகுதி பங்கீட்டை மதிமுக இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக-மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், ஆரம்பத்தில் 4 இடங்கள் வரை ஒதுக்க திமுகமுன்வந்திருந்தது. தற்போது, 5முதல் 6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று கூறப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகள் அண்ணா அறிவாலயத்தில் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொகுதி பங்கீட்டில் இழுபறி., தனி சின்னத்தில் தான் போட்டி – வைகோ அதிரடி

வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிசின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சமரசம் செய்ய திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தினர். மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக அனைத்து தொகுகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என கூறியுள்ளார். எத்தனை தொகுதிகள், பொது சின்னம் என வியூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்றும் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியோட அங்கீகாரத்தை பெறுவதற்காக 12 தொகுதிகள் வரை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, 8 தொகுதிகள் வெற்றி பெற்றாலே உரிய  அங்கீகாரம் கிடைத்துவிடும் என பதிலளித்துள்ளார். அப்போ 8 தொகுதிகள் எதிர்பார்க்கபடுகிறதா என்ற கேள்விக்கு, நல்லதையே எதிர்பார்ப்போம் என வைகோ கூறியது, தொகுதி பங்கீட்டில் இன்னும் இழுபறி இருப்பதாக தெரிய வருகிறது.

தொடர்ந்து பேசிய அவர், மதிமுகவின் தேர்தல் அறிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பது அறிவிக்கப்படும். அதன்பிறகு தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது அவர்களுடைய உணர்வு, நியாயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#ElectionBreaking: வைகோவுடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் அவசர ஆலோசனை.!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து, திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் அவசர ஆலோசனை.

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சமரசம் செய்ய திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.