உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இந்த நிலைக்கு காரணம் – அன்புமணி ராமதாஸ்

அகில இந்திய தொகுப்பில் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மாநில அரசு கல்லூரிகளிடமே ஒப்படைக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் 24 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த 24  இடங்களும்,வீணாக  போவதாக அன்புமணி ராமதாஸ்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், … Read more

ஹேப்பி நியூஸ்: இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு ரத்து! – உக்ரைன்

தேர்வு இல்லாமலேயே இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, MBBS பட்டம் வழங்க உக்ரைன் அரசு முடிவு. லைசன்ஸ் தேர்வு ரத்து: உக்ரைனில் மருத்துவம் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு எனப்படும் இறுதித் தேர்வை நடத்தாமலேயே எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. மருத்துவம் படித்த ஐந்தாவது ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் மற்றும் KROK தேர்வு ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. MBBS பட்டம்: மருத்துவ படிப்பில் மூன்றாம் … Read more

அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடுக்கு அனுமதி- உச்சநீதிமன்றம்..!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில  மருத்துவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த … Read more

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல்முறையாக ஆன்லைனில் தொடங்கியது!

தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை … Read more

முதல் முறையாக பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்!

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் பிப்.5ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு  இன்று முதல் தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு … Read more

#BREAKING: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு. 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. … Read more

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு – முதல்முறையாக ஆன்லைனில் கலந்தாய்வு!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு,அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள் உள்ளன.மேலும்,சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்நிலையில்,தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.அதன்படி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் … Read more

எம்பிபிஎஸ்,பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடக்கம் – லிங்க் இதோ!

எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வில் தாமதம்,பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்டகாரணங்களால்,இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-22 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில்,மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தலாம் … Read more

மாணவர்களே..மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் – Apply செய்து விட்டீர்களா?..!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958  இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) 1925 இடங்களும் உள்ளன.அந்த வகையில் மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை 19 ஆம் தேதி (இன்று) வெளியாகிறது என்றும், அதன்படி,எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் … Read more

இன்று முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விநியோகம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் ஆன்லைன் மூலம் விநியோகம். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்,மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958  இடங்களும், பல் மருத்துவ … Read more