மேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பார்ஜி ஜூலை 1-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு. ஜூலை 1 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், … Read more

பிரதமர் மோடியின் தாமதமான முடிவு பலரது உயிரை வாங்கி விட்டது…! – மம்தா

தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு. பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கனவே பலரது உயிரை வாங்கி விட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று மக்களிடம் உரையாற்றினார்.மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இவரது அறிவிப்பிற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில … Read more

#BREAKING : மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து…!

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் காரணமாக பொது தேர்வுகள் ரத்து. மேற்குவங்கத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் ஒரு … Read more

பொதுநலனுக்கு மேலான ஆணவம்….சிறிய நடத்தை… மம்தாவிற்கு அமித் ஷா கண்டனம்!

மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியுடனான கூட்டதிற்கு தாமதமாக வந்ததற்கு அமித் ஷா கண்டனம்… வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே 2 நாட்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. மேலும் புயல் கரையைக் கடந்த போது 130 கி.மீ க்கு மேல் பலத்த சூராவழிக்காற்று வீசியது, மேலும் யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், மேற்குவங்கம் … Read more

மேற்கு வங்கத்தில் 43 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் பதவியேற்பு…!

மேற்கு வங்கத்தில், ராஜ் பவனில் ஆளுநர் ஜகதீப் தங்கர், ஒரே நேரத்தில் 43 அமைச்சர்களுக்கும் பதவியேற்பு பிரமாணத்தை செய்து வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 215 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாரதிய ஜனதா 77 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில், மம்தா பானர்ஜி அவர்கள் மே 5-ஆம் தேதி, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இவர் பெங்காலி … Read more

பிரதமருக்கு கடிதம் எழுதிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மாநிலத்தில் கொரோனாவின் நிலைமை தொடர்பான செயல் திட்டம் குறித்துப் பேசப் போவதாக அறிவித்திருந்தார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் இலவச நோய்த்தடுப்பு மற்றும் போதுமான தடுப்பூசி விநியோகத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். … Read more

நாங்கள் ‘தெரு போராளிகள்’….! தேர்தல் ஆணையத்தின் உதவியின்றி பாஜக 50 இடங்கள் கூட தாண்டி இருக்காது….! – மம்தா

தேர்தல் ஆணையம் இதற்கு உதவவில்லை என்றால் பாஜக 50 இடங்களை கூட தாண்டி இருக்காது. மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேர்காணலின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தை அவதூறாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் பாஜகவின் செய்தி தொடர்பாளர் என்றும், தேர்தல் ஆணையத்தின் உதவியின்றி பாஜக 50 இருக்கைகளை கூட தாண்டி இருக்காது. தேர்தல் ஆணையம் இந்த முறை நடந்து கொண்ட விதம் கொடூரமானது. … Read more

கொடூரமான பெண்ணை மீண்டும் தேர்ந்தெடுத்ததன் மூலம் மேற்கு வங்காள மக்கள் ஒரு வரலாற்று பிழையை செய்துள்ளனர் – பாபுல் சுபிரியோ

கொடூரமான பெண்ணை மீண்டும் தேர்ந்தெடுத்ததன் மூலம் மேற்கு வங்காள மக்கள் ஒரு வரலாற்று பிழையை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி குறித்தும், பாஜக தோல்வி அடைந்தது குறித்தும், பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு … Read more

நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…! கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்….!

நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற  திரிணாமுல் கட்சியினரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தார். இதன்பின் 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்த நிலையில்  சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் கூடுதலாக பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் … Read more

மேற்கு வங்கத்தில் வெறுப்பு அரசியலை வீழ்த்திய மனசாட்சி உள்ள மக்கள்…! பாஜக-வுக்கு தக்க பதிலடி…! – அகிலேஷ் யாதவ்

மேற்கு வங்கத்தில் வெறுப்பு அரசியலை வீழ்த்திய மனசாட்சியுள்ள மக்கள், மம்தா பானர்ஜியின் போராட்டம், அர்ப்பணிப்பான தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அங்கு 294 தொகுதியில் 292 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இந்த 292 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் பாஜக 78 இடங்களில் … Read more