டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை!!

எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

காங்கிரேசின் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடக்கும் ஆலோசனையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. மேலும், டி.ஆர். பாலு, திருச்சி சிவா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட எம்பிகளும் ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த 28ம் தேதி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், 14 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலே ஆகியோர் உட்பட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற அவைகளில் பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்வியை எழுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பெகாசஸ் மென்பொருள் தொடர்பாக பிரதமர் மோடியின் அரசாங்கத்தை குற்றசாட்டியிருந்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.