#BREAKING : சாத்தான்குளம் வழக்கை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என நீதிபதி கேள்வி. சாத்தான் குளத்தில் போலீஸ் காவலில் வைத்து, தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, இந்த … Read more

போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எங்கு வைக்கப்பட்டுள்ளது? – உயர்நீதிமன்றக்கிளை

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எங்கு வைக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி. பள்ளிக்கு அருகே கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்க கோரி  பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 50 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வழக்கு போதை தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கும், அதற்கு கீழான வழக்குகள் அந்தந்த … Read more

#BREAKING : மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னை கொண்டு வர உத்தரவு – உயர்நீதிமன்ற கிளை

6 மாதத்திற்குள் சென்னையிலுள்ள தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு, மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும். மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பழமையான வரலாற்றுக்கு ஆதாரமாக, பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுக்களில் இருந்து கிடைப்பதால், அதன் முக்கியத்துவதை உணர்ந்து, 1961-ல் கல்வெட்டியல் துறையை ஏற்படுத்தபட்டது. பல்வேறு காலகட்டங்களில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில், 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை.  இந்நிலையில்,மைசூர் கல்வெட்டியல் … Read more

கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ-க்கு சுதந்திரம் வழங்க வேண்டும்…! மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உததரவு…!

கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ராமநாதபுரத்தில் நடைபெற்ற ரூ.300 கோடி நிதி மோசடி வலக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரிக்க கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்க … Read more

7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை

7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிசந்திரன், ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இதனையடுத்து, 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என சிறையில் இருக்கும் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக தாங்கள் விடுதலை … Read more

ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு  புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  புதுக்கோட்டையில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சிறுவனின் ஆதார் விபரம் இல்லாத காரணத்தால், சிறுவனை கண்டறிய முடியவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு  புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என … Read more

ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது..!

கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர  உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. குமரி மாவட்டம் அருமனையில் மத பிரச்சார கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜார்ஜ் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர் கடுமையாக விமர்சித்து பேசியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாரதியார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் புகாரை அடுத்து வீடியோ ஆதாரத்தின் … Read more

#BREAKING : இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது – மத்திய அரசு

இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள், கடந்த 2019-ம் ஆண்டு தங்களுக்கு இந்திய குடியுரிமை  வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும், குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், புதிதாக விண்ணப்பம் செய்யவும், அந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி, உரிய … Read more

#BREAKING : பல நீர்நிலைகள் அழிந்து விட்டன..! இனியும் நீர் நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது – தலைமை நீதிபதி

பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்கமுடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.  மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே, புதுக்குளம் கண்மாயில் மின்மயானம் அமைப்படுவதை எதிர்த்து , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, மதுரை மாவட்ட … Read more

#BREAKING : ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்..? – உயர்நீதிமன்ற கிளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி  27 ஆண்டுகளாக எனது மகன் ரவிசந்திரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே … Read more