முதல்வரானார் நடிகர் விஜய்? கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து…வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு!

vijay politics

மதுரை விஜய் ரசிகர்கள் சார்பில், விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது என்றே கூறலாம். அண்மையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகையை வழங்கினார். இதை வைத்து பார்க்கும்பொழுது, வரும் காலங்களில் அவர் … Read more

போலி பாஸ்போர்ட் விவகாரம்.? மதுரையில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை.!

NIA Officials search in Madurai

சமீப காலமாகவே தீவிரவாத கண்காணிப்புகள் குறித்து வழக்குகளை விசாரணை செய்யும் தேசிய புலனாய்வு அமைப்பான NIA இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை குக்கர் வெடிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்த சோதனை தீவிர படுத்தப்பட்டது. தற்போது NIA சோதனையானது மதுரையில் அதிகாலை நிலையை தொடங்கியுள்ளது. மதுரை காவல்துறையினர் பாதுகாப்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ள காஜிமார் தெருவில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு … Read more

மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்! – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்.  தமிழ்நாட்டில் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் அங்கும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அதன்படி, ராமேஸ்வரம் (ரங்கநாத சுவாமி), திருவண்ணாமலை (அருணாச்சலேஸ்வரர்), மதுரை (மீனாட்சி) ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.    

முறையாக போனஸ் வழங்க வேண்டும்.! மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம்.!

முறையான போனஸ் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ், அகவிலை படியும் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும், 2006 போனஸ் திருத்த சட்டதத்தின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு … Read more

“உயர்கல்வி படிக்க இளநிலை சான்றுகளை வழங்க வேண்டும்“ – நீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி கருத்து. உயர்கல்வி படிக்க இளநிலை MBBS சான்றுகளை வழங்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ சான்றை வழங்க கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி … Read more

அரிட்டாபட்டி சுற்றுலாத்தலமாக மாற்ற முயற்சித்தால் அது நடக்காது.! – எம்பி சு.வெங்கடேசன் ஆய்வு.!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பாறை, குன்றுகள் இயற்கை சங்கிலிகள் இன்னும் அரிட்டாபட்டியில் உயிர்ப்புடன் இருக்கின்றன. அதன் மாண்பு குறையாமல் பாதுகாக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கடந்த 2020 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை அண்மையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. தற்போது அது குறித்து, திட்டமிடலுக்காக மதுரை எம்பி சு.வெங்கடேசன் அரிட்டாபட்டியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக … Read more

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை. மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கத்தில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை வீடியோ ஆதாரமாக கூறி வந்த நிலையில், செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வெளியே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரை மாமன்ற கூட்டம் தொடங்கி … Read more

திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க இலவச அனுமதி

உலக மரபு வாரத்தை ஒட்டி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை, இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மதுரையின் முக்கிய அடையாளமாக இருப்பது திருமலை நாயக்கர் மஹால்.இது 17 ஆம் நூற்றாண்டு அரசர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. உலக மரபு வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி, திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரம் நுழைவு கட்டணமின்றி சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 19 முதல் 25 வரை காலை 10 … Read more

மதுரையில் விஏஓ அலுவலக மேற்கோரை பெயர்ந்து தலையாரி தலையில் விழுந்து விபத்து.!

மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தில் விஏஓ அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவியாளருக்கு தலையில் அடிபட்டது.  மதுரை மாவட்டம் திருமங்களம் அருகே, பொன்னமங்கலம் கிராமத்தில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தின் மேற்கூரை இன்று பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அருண் பாண்டியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், உக்கிர பாண்டியன், லட்சுமணன், கருப்பாயி ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மதுரை … Read more

பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் கைது

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிதி உதவியையும் அறிவித்திருந்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், பட்டாசு … Read more