கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்து வழக்கு..!

கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் “டெபாசிட்” செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை … Read more

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவுப்புக்கு தடை விதிக்கக்கோரி அப்துல் என்பவர் மதுரை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த மனுவில், மாணவர்கள் கண்டிப்பாக வகுப்புக்கு வர வேண்டும் என்று சில பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். இன்னும் 18 … Read more

“10 வாரங்களில் தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்”- மதுரை கிளை நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடந்தது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை தொல்லியல் துறை ஆய்வு செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக நடவடிக்கையை 10 வாரங்களில் தொல்லியல்துறை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

“தமிழக அரசின் தலைமை செயலாளரை காணொலிக் காட்சி மூலமாக விசாரிக்க நேரிடும்”- உயர்நீதிமன்ற மதுரை கிளை!

சட்ட விரோத மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, கடும் எச்சரிக்கையை முன்வைத்தனர். மேலும், மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை தொடர்ந்து சோதிக்க வேண்டாம் எனவும், மீறினால் தமிழக அரசின் தலைமை செயலாளரை காணொலிக் காட்சி மூலமாக விசாரிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். … Read more

விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதிக்க இயலாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும்?”- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கொரோனா பரவும் சூழலில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் ராஜபாளையம், மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் 5 விநாயகர் சிலைகள் வைத்து, 50 பேர் மட்டும் பங்கேற்புடன் விநாயகர் … Read more

வனத்துறையினர் தாக்கி விவசாயி உயிரிழந்த வழக்கு.. 8 நாட்களுக்கு பிறகு உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

வனத்துறையினர் தாக்கி விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த நிலையில், அவரின் உடலை எட்டு நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் கடந்த 22-ம் தேதி வனத்துறையினரால் தாக்கி, விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார். இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தபட்ட வனத்துறை அதிகாரியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முத்துவின் … Read more

“வனத்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த முதியவர் முத்துவின் உடலில் காயங்கள் இருந்தது”- நீதிபதி!

தென்காசியில் வனத்துறையினரால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் உயிரிழந்த முத்துவின் உடலில் காயங்கள் இருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார்.  தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் கடந்த 22-ம் தேதி வனத்துறையினர் தாக்கி விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவரின் மகன், கடந்த 23-ம் தேதி ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தபட்ட வனத்துறை அதிகாரியை … Read more

விவசாயி உயிரிழந்த வழக்கு.. சிபிசிஐடி விசாரிக்ககோரிய வழக்கு ஒத்திவைப்பு!

தென்காசியில் வனத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த முத்துவின் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்ககோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.  தென்காசி மாவட்டம், ராவணசமுத்திரத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. இவர் தந்து விளைநிலத்தில் அரசின் விதிகளை மீறி, மின் வேலிகளை அமைத்த நிலையில், கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர். அதன்படி, அவரும் ஆஜராகினார். அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறையினர் … Read more

“ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும்”- மதுரை கிளை நீதிமன்றம்!

பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியது. தமிழகத்தில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த சிலுவை என்பவர், மாடுறது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய மத்திய, மாநில அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும் என … Read more