பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகையொட்டி திருப்பரங்குன்றம் அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பகுதியில் தை பொங்கல் அன்று முதல் ஜல்லிகட்டு ஆரம்பமாகும். இதனையடுத்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் … Read more

"தேர்தலுக்கு தயார் EPS , OPS சூளுரை" சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மதுரையில் நடத்திய ஆலோசனைக்கு பின்   திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக என அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வரும் துணை  முதல்வரும் இணைந்து அளித்த பேட்டியில்  அதிமுக தற்போது யாருடனும் கூட்டணி கிடையாது, ஆர்.கே.நகர் தேர்தல் போன்று திருப்பரங்குன்றத்தில் நடக்காது இடைத் தேர்தல் எப்போது வந்தாலும், அதிமுக 50 … Read more

18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்..

கஞ்சா விற்பனை செய்வது இப்பொது அதிகமாகிவிட்டது.இதனை தடுக்க போலிசார் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு வருகின்றனர். சேடபட்டி பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகட்டளை ஒச்சாத்தேவர், கணவாய்பட்டி செல்லத்துரை, பெரியகட்டளை தங்கப்பாண்டி ஆகியோர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒச்சாத்தேவரை கைது செய்தனர்.

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்வு…

தேனி மாவட்ட குரங்கணி காட்டுத்தீயில் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்பவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இதனால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் ரத யாத்திரையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்….!!

தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செய்வதை கண்டித்து மதுரையில் சாலை மறியல் போராட்டம் செய்த  எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக,திக,விசிக,கம்யூனிஸ்ட்,நாம் தமிழர் போன்ற பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நுழைவதை கண்டித்தும், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தலைவர்களின் கைதை கண்டித்தும் … Read more

ஒரத்தநாடு – தஞ்சை இடையே புதிய வழிதடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரி வழக்கு..!!

ஒரத்தநாடு – தஞ்சை இடையே புதிய வழிதடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரி வழக்கு. விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ரயில்வே துறை அதிகாரிகள் பதில் தர உத்தரவிட்டு விசாரணையை ஏப்.16க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

கிறிஸ்துவ வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம்…!!

கிறிஸ்துவ வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதை கண்டித்து மதுரை ஆனையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,திமுக,மதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டு பலர் பங்கெடுத்ததுள்ளனர்.

மதுரை முக்கம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி…!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கோயில் திருவிழாவை முன்னிட்டு முக்கம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 900 காளைகளும், 425 மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி. ஒரு வாரத்திற்குள் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், வியாபாரம் செய்வதற்கு அனுமதி இல்லை . மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து புதுமண்டபத்தில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கை மீதான இடைக்காலத்தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்துசமய அறநிலையத்துறை மார்ச் 20 ஆம் தேதிக்குள் பதில் … Read more

குரங்கணி காட்டுத்தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு….

தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதில் நேற்று வரை பலி எண்ணிக்கை 14ஆகவே இருந்தது.இந்நிலையில் சக்திகலாவைத்தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.