நிலமோசடி விவகாரம்: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு!

நிலமோசடி விவகாரம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நிலம் வாங்கித் தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி புகாரளித்தார். இதனைதொடர்ந்து, இந்த நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என நடிகர் … Read more

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை – ரிசர்வ் வங்கி.!

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தில் மூலம், இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்படும். இந்நிலையில், இந்த அவசரச்சட்டத்தை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த இரு பழமையான கூட்டுறவு சங்கங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதால் இந்த வழக்கில் அவசரச்சட்டம்  … Read more

தலைமைச்செயலர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு..!

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தலைமைச் செயலர் ஆஜராக  உத்தரவு. கடந்த 2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதி இல்லை என வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தவில்லை என கூறி மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அதில்,  2017-க்குப் பிறகு வாங்கப்பட்ட 4,381 பேருந்துகளில் ஒரு பேருந்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான … Read more

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?- சென்னை உயர்நீதிமன்றம்!

அரியர் தேர்வு விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் உத்தரவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் … Read more

“அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!”- ஏஐசிடிஇ

அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை தேர்ச்சி செய்தது யூஜிசி விதிகளுக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை தேர்ச்சி செய்தது யூஜிசி விதிகளுக்கு எதிரானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், கல்லூரி இறுதிப்பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்தவேண்டும் எனவும், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்து … Read more

“ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கிறது!”- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் சீரழிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வில் வந்த நிலையில், விராட் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் சீரழிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து, இந்த வழக்கில் விசாரணையை … Read more

#BreakingNews : வரி ஏய்ப்பு புகார் – ஏ.ஆர். ரகுமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிப்ரா  செல்போன் நிறுவனத்திற்கு இசையமைத்ததற்கு ரூ.3.47 கோடி ஊதியம் பெற்றதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் அவரது பெயரில் ஊதியத்தை  வாங்காமல் ஏ.ஆர்.ஆர்  அறக்கட்டளைக்கு செலுத்தி வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் … Read more

தேசிய கொடியை அவமதித்த வழக்கு ! எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்கிறோம் – காவல்துறை

தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகரின் ஏற்பதாக  காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்  தெரிவித்துள்ளது. நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் … Read more

அரியர் தேர்வுகள் ரத்து – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் … Read more

“சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவி கலைக்கப்பட்டது ஏன்? மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்”- சென்னை உயர் நீதிமன்றம்!

சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்தவரை நியமித்தது ஏன்? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் விடீயோக்களை வெளியிட்டவர், திருத்தணிகாசலம். இவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகாரளித்த நிலையில், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்மீது குண்டாஸ் பாய்ந்தது. இந்தநிலையில், திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து … Read more