#JustNow: விசாரணையின்போது ஒழுங்கீனம் – வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிப்பு!

விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்த உயர்நீதிமன்றம்.  காணொளி வாயிலாக விசாரணையின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காணொளி விசாரணையின்போது பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவரை வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே 34 நாட்களாக சிறையில் இருந்து வருவதால் தண்டனையை கழித்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்தும், சிபிசிஐடி போலீசார் … Read more

குண்டர் சட்டம்: பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. இதுகுறித்து சென்னை  சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் மதன் கைது செய்யப்பட்டாா். பின் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கைது … Read more

#BREAKING: பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை.., தமிழக அரசு முறையீடு..!

பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் முறையீடு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகம் சார்பில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 20 ஆயிரம் டன் பருப்பு 80 லட்சம் லிட்டர் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த டெண்டர் … Read more

#Breaking: தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டருக்கு பற்றாக்குறை இல்லை- தமிழக அரசு!

தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டருக்கு பற்றாக்குறை இல்லை என்றும், அரசு மருத்துவமனைகளில் 31,000 ரெம்டெசிவிர் மருந்துகள் இருப்பு உள்ளதகாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 11,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிழும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனகாரணமாக பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதேசமயத்தில் தமிழகத்திலும் தடையின்றி ஆக்ஸிஜன் சேவை வழங்கப்படுகின்றது. அந்தவகையில் … Read more

#ElectionBreaking: “வாக்காளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துக”- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள், வேட்புமனுக்களை தாக்கல் செய்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் … Read more

சக்ரா படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்.!

சக்ரா திரைப்படம் வெளியாவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இயக்குனர் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் வெளியாவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. டிரைண்ட் ஆர்ட்ஸ் தாக்கல் செய்த வழக்கில் பிப்ரவரி 16-ம் தேதி சக்ராபடத்திற்கு விதித்த தடையை தற்போது உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. மேலும் மார்ச் 5 ஆம் தேதி வரை டிக்கெட் வசூல் குறித்து மார்ச் 10ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நடிகர் … Read more

#BREAKING: தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சீவி பானர்ஜி தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார். சென்னை உயர்நீதி மன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவி பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தும் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தும் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக்த்தில் குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னையில் உள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் ஏத்தனையோ ஜிபிஎஸ் நிறுவனங்கள் இருந்தும், … Read more

பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகாரளித்த பெண்ணுக்கு காத்திருந்த பரிசு!

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் அளித்த பெண், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் வசித்து வந்த சந்தோஷ் என்பவர், அவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணுடன் நட்புறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் காதல் மலர, இருவரின் வீட்டில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால் நிலப்பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, சந்தோஷ் குடும்பத்தினர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். அதன்பின் தன்னுடைய மகளை … Read more

மருத்துவப் படிப்பில் முறைகேடு.. சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவப் மேற்படிப்பிற்காக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து மருத்துவ மேற்படிப்பிற்காக மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வந்தது. இந்தநிலையில், இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், “தகுதி இல்லாதவர்கள் பணம் … Read more