தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது -மத்தியபிரதேசத்தில் அதிரடி உத்தரவு!

ஜூன் மாதத்திற்கான சம்பளம் பெறும் பொழுது கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான மிகப்பெரும் பேராயுதம் தடுப்பூசி தான் என மக்கள் நம்பி வரும் நிலையில், பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சிலர் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்பி தடுப்பூசி போடுவதற்கு அஞ்சுகின்றனர். இருப்பினும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக … Read more

மனைவியை கடித்த நாயை சுட்டுக்கொன்ற பாசக்கார கணவர் கைது!

மத்திய பிரதேசத்தில் தனது மனைவியை கடித்து குதறிய நாயை துப்பாக்கி வைத்து சுட்டுக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடமிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் எடுத்த சுதாமா எனும் நகரில் வசித்து வரக்கூடிய நரேந்திர விஷ்னோய் என்பவரின் மனைவியை அவரது அண்டை வீட்டுக்காரரான மருத்துவர் வினித் என்பவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. நாய் கடித்ததால் வலி தாங்காமல் விஷ்னோய் மனைவி அலறி துடித்து வீட்டிற்குள் வந்துள்ளார். அதைப் பார்த்து … Read more

கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக ‘தவளை ஜம்ப்’ தண்டனை – மத்திய பிரதேச போலீஸ்

கல்யாணத்திற்கு சென்றவர்களை  தவளை ஜம்ப் போட வைத்த காவல்துறை…ஒரே இடத்தில் 300 பேர் கூடியதால் நூதன தண்டனை. மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து பல உயிர்களை பறித்துள்ளது , இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, கொரோனா சூழலை சற்றும் பொருட்படுத்தாத மக்கள் ஆங்காங்கா சுற்றி திரிந்து வருவதால் அவர்களை அடக்கும் பொருட்டு மத்திய பிரதேச காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனையடுத்து மத்திய பிரதேசம் போபால் பிந்த் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தடையை … Read more

கொரோனாவை எறிக்க மண்ணெண்னை குடித்த நபர்; டெஸ்ட் ரிபோர்ட் நெகடிவ் உயிரை பரித்த சோகம் !

மத்திய பிரதேசத்தில் கொரோனா இருப்பதாக நினைத்து மண்ணெண்னை குடித்து உயிரை இழந்த பரிதாபம். இந்தியா முழுவதும் கொரோனா சற்றும் குறையாமல் ஏற்படுத்தும் பேரழிவுகளோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில் மக்களில் சிலர் அறியாமையால் தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் போபாலின் சிவ் நகர் ஹினோட்டியா வட்டாரத்தில் வசித்த நபர்  30 வயதுள்ள மகேந்திரா என்பவருக்கு கிட்டத்தட்ட 5 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் இருந்துள்ளது … Read more

கொரோனா சிகிச்சையின் போது ஆண் செவிலியரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு!

கொரோனா சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொழுது ஆண் செவிலியரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் அன்று மாலையே உயிரிழந்துள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்து வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் உயிரிழக்கின்றனர். இவை … Read more

இலவச கல்வி, ரேஷன் மற்றும் மாதம் 5000 ஊக்க தொகை – பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய பிரதேச அரசு சலுகை!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, ரேஷன் மற்றும் மாதம் 5000 ஊக்க தொகை ஆகியவை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து  கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் … Read more

சடலங்களை வைத்து அரசியல் செய்யும் பாஜக அரசு – முன்னாள் முதல்வர் கமல்நாத் கடும் விமர்சனம்!

கொரோனா 2வது அலைகளை மாநில அரசு முன்கூட்டியே கவனித்திருக்க வேண்டும் என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கடும் விமர்சனம். காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், மத்திய பிரதேசத்தில் கொரோனா இறப்புகள் குறித்து குறைவான எண்ணிக்கையை அறிக்கையில் அளித்திருப்பதாக ஆளும் அரசு மீது குற்றம் சாட்டினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மாநில அரசு மறுத்துள்ளது. கொரோனா நெருக்கடியை பாஜக அரசு தவறாக நிர்வகிப்பதாக இது நிர்வாகத்தின் குற்றவியல் அலட்சியம் என்று குறிப்பிட்டார். … Read more

மத்திய பிரதேச பேருந்து விபத்து ! 38 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி என்ற பகுதியில் இருந்து சட்னா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 54 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஓட்டுநர் கட்டுப்பாட்டை பேருந்து இழந்த நிலையில் சித்தி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்துள்ளது.செய்தி அறிந்ததும் கிராம மக்கள், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,பேருந்தில் … Read more

மத்திய பிரதேச மாநிலத்தில் காவ்வாயில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய பிரதேச மாநிலம் சித்தி என்ற பகுதியில் இருந்து சட்னா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 54 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஓட்டுநர் கட்டுப்பாட்டை பேருந்து இழந்த நிலையில் சித்தி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்துள்ளது.பேருந்தில் பயணித்த 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து கால்வாயில் விழுந்தது

மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி என்ற பகுதியில் இருந்து சட்னா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 54 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஓட்டுநர் கட்டுப்பாட்டை பேருந்து  இழந்த நிலையில் சித்தி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்துள்ளது.பேருந்தில் பயணித்த 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.