“ஆட்சியை கலைத்தால் தூக்கி போட்டு மிதிப்போம்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம் !

கர்நாடாவை போல தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைத்தால் பந்து மாதிரி தூக்கி போட்டு மிதிப்போம் என்று தமிழக பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி … Read more

நீங்கள் அல்வா குடுத்து மக்களை ஏமாற்றுவதாக நான் கூறுவேன் – மு.க ஸ்டாலின் பதிலடி!

நாங்கள் மிட்டாய் குடுத்து ஏமாற்றியதாக நீங்கள் கூறுகிறீர்கள் , நீங்கள் அல்வா குடுத்து ஏமாற்றுவதாக நான் கூறுகிறேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுத்திக்கான நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் சூழலில், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்,திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை … Read more

அதிமுக அரசின் சாதனையை சொல்ல 3 மணிநேரம் காணாது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அதிமுக அரசாங்ககம் செய்த சாதனைகளை சொல்லி முடிக்க 3 மணி நேரம் பத்தாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா காரணமாக நடைபெறாமல் இருந்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர்ஆனந்த் , அதிமுக சண்முகம் உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது, வேலூரில் அரசியல் கட்சி தலைவர்களின்  தேர்தல்  பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இன்று … Read more

“இது தமிழக அரசா, இல்லை சமஸ்கிருத அரசா “- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

12 ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பழமையை மாற்றி இருப்பதை குறிப்பிட்டு இது தமிழக அரசா இல்லை சமஸ்கிருத அரசா என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், எப்படி சகிப்பது இந்த கொடுமையை? தமிழ் மொழி  2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம் அனால், சமஸ்கிருதம் மொழி 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகம் என்று கூறியுள்ளார். … Read more

உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது-மு.க.ஸ்டாலின்

நேற்று  நெல்லையில் திமுக  முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  உட்பட மூவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது உமா மகேஸ்வரி கொலை  தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது இரங்கல் செய்தியில்,  திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகளை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாவட்ட மகளிர் அணித் தலைவர் உமா மகேஸ்வரியின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பாகும்  என்று … Read more

3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்‌ஷித் நிர்வாகத் திறமைமிக்கவர் என பாராட்டப்பட்டவர்-மு.க.ஸ்டாலின்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்‌ஷித் காலமானார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,  டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். 3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்‌ஷித் நிர்வாகத் திறமைமிக்கவர் என பாராட்டப்பட்டவர் .டெல்லி வளர்ச்சி, மாநில மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றினார் என்று … Read more

அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராக திமுக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

மத்திய அரசானது அணைகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர அணைகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது.  இதற்கு எதிராக திமுக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தில், ‘ அணைகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அதனை மத்திய அரசு தன்வசப்படுத்தும் பார்க்கிறது அணைகளை பாதுகாக்க மத்திய அரசு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுத்தாலே போதுமானது. மாநில சட்ட மன்றங்களின் தீர்மானங்களை மதிக்காமல் மத்திய அரசு நடந்து வருகிறது. … Read more

வேலூர் மக்களவை தேர்தல் களம்! திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்ற நேரத்தில் தமிழ்நாட்டில் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் அதிகளவு பணப்பட்டுவாடா நடையப்பெற்றதாக கூறி, அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சமீபத்தில் வேலூர் மக்களவை தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என வெளியானது. இதில் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். முதலில் அறிவிக்கப்பட்ட தேர்தலிலும் இவர்தான் வேட்பாராக … Read more

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா?! நீட் தேர்வு விவகாரத்தில் திடீர் திருப்பம்!

சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் திமுக சார்பில், ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.’ ஆனால் அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ நீட் விலக்குக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை. நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார். இந்த விவரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ 2017 பிப்ரவரி மாதம் தமிழக அரசு … Read more

ராஜினமா செய்ய தயார்! மு.க. ஸ்டாலினிடம் அதிமுக அமைச்சர் உறுதி!

நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசிடம் இருந்து தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் விலக்கு மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்படி தவறான தகவலை கூறியதால் அவர் பதவி விலக வேண்டும் என கூறினார். இது குறித்து பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீட் … Read more