உணவுப்பொருட்கள் விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிப்பு – மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு. நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பேசிய கனிமொழி எம்பி, உணவுப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பாஜக ஆட்சியில் … Read more

#BREAKING: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மற்றும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. இந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவை தலைவர் … Read more

இதுவே முதல் முறை; எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் 19 ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று மக்களவையிலிருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா அறிவித்த நிலையில், இன்று மாநிலங்களவையில் 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணவீக்கம் தொடர்பாக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், … Read more

#BREAKING: ஓபிஎஸ் மகன் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார் என தகவல். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என்று மக்களவை சபாநாயகருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அதில், ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் … Read more

#BREAKING: ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை – சபாநாயகருக்கு ஈபிஎஸ் கடிதம்!

அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என்று மக்களவை சபாநாயகருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என  அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி … Read more

#JustNow: தமிழகத்தில் வங்கி கிளைகளில் தமிழில் பரிவர்த்தனை – நிதியமைச்சர்

தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் தமிழிலேயே பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு என நிதியமைச்சர் விளக்கம். தமிழகத்தில் செயல்படும் அனைத்து வங்கி கிளைகளிலும் தமிழில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர், தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகள், ஏடிஎம்களில் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றிலும் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு. டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளைக்கு பதில் முன்கூட்டியே இன்றே முடித்துக்கொள்ளப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து அலுவலகங்களும் ஏற்கனவே முடிந்ததால் இன்றுடன் முடிவு பெற்றது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31ம் தொடங்கி, பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னா் கூட்டத்தொடரின் முதல் … Read more

நாடு திரும்பியவர்கள் மருத்துவ படிப்பை நிறைவு செய்ய ஏற்பாடு – வெளியுறவுத்துறை அமைச்சர்

உக்ரைனில் மருத்துவ படிப்பை பாதியில் விட்டு திரும்பிய மாணவர்கள் பற்றி மக்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பை நிறைவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை அளித்துள்ளது. மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு வழங்கியது உக்ரைன் அரசு. உக்ரைனில் இருந்து … Read more

ஓர் அலசல்! மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? இதோ!

டெல்லி நாடாளுமன்றம் மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? என்பது குறித்த ஓர் அலசல். மாநிலங்களவை தேர்தல்: நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, பஞ்சாப்பில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, இமாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்தில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது. … Read more

நீட் விலக்கு மசோதா இதுவரை வரவில்லை – மத்திய அரசு

நீட் விலக்கு மசோதா இதுவரை கிடைக்க பெறவில்லை என மத்திய அரசு பதில். நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி அ.ராசா எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரவின் பவார் பதில் அளித்தார்.