ரயில் மற்றும் விமானங்களில் இ-பாஸ் மூலம் வரலாம்.!

ரயில், விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் மூலம் வர அனுமதி. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு. மேலும், மதுரையில் நாளை  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் மற்றும் விமானங்களில் … Read more

மின்ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் .! திருவள்ளூர் எஸ்.பிக்கு நோட்டீஸ்.!

மின்வரிய பணியாளர் அடையாள அட்டையை காண்பித்தும் அவரை காவல்துறையினர் எப்படி பாஸ் கேட்கலாம்-மனித உரிமை ஆணையம் சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தான் கொரோனா தாக்கம் தினமும்  அதிகமாக உள்ளது. இதனால் சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய  மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் சென்னை ஆவடியில் இ-பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியரை போலீசார் தாக்கியுள்ளார்கள். நடந்தது என்னவென்றால் … Read more

மதுரையில் ஊரடங்கு- இவைகளுக்கெல்லாம் அனுமதி.. இவைகளுக்கெல்லாம் தடை!

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் அங்கு நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவைக்கெல்லாம் தடை, அனுமதி: … Read more

கொரோனா வைரஸ் தாக்குதலால் 20 லட்சம் பேர் வேலை இழப்பு – பிஓசிஐ

கொரோனா வைரஸ் தாக்குதலால் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்  தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,  கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமால்லாமல், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு, கொரோனா … Read more

அடியெடுத்து வைத்தால் அரஸ்ட்…அதிதீவிர வளையத்தில் தலைநகர்

கொரோனா வைரஸ் காற்றை விட அதி விரைவாக பரவி வருகிறது தமிழகத்தில் மேலும் அதன் பரவல் மிக  உக்கிரமாக தலைநகரை தாக்கி வருகிறது.இதன் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் அங்கு கட்டுப்பாட்டுகளை கட்டி உள்ளது அரசு.முன்பு இருந்த கட்டுப்பாடுகள் போல் இல்லாமல் தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது. இந்த கட்டுப்பட்டால் பெட்ரோல் பங்க், மளிகை, காய்கறி உள்பட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது.அத்தியவசிய  தேவைகளான பால், மருந்து, பத்திரிகை விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. உத்தரவு பிறப்பிப்பட்ட நிலையில் … Read more

இன்று ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை

இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே  ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது 20.6.2018 நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 5 மணி வரையிலும் எந்தவிதக் தளர்வின்றி முழு ஊரடங்கு உத்தரவு … Read more

தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு.! ஒரே ஒரு நாள் மட்டும்.!

தேனி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மட்டும் நாளை ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரையில் முழு பொதுமுடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சில விதிமுறைகள் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தேனி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மட்டும் நாளை ஒரு நாள் … Read more

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா ? முதல்வர் பழனிசாமி விளக்கம்

பொதுமுடக்கத்தை நீட்டிக்க இதுவரை முடிவு செய்யவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகமாகி வருகிறது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை, 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை … Read more

லாக்கில் தலைநகர்.!2,000 வாகனங்கள்..பறிமுதல்!2,346 பேர் மீது வழக்கு!

தலைநகர் சென்னையில் கொரோனா உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் கட்டுப்படுத்த மீண்டும் அங்கு லாக்டவுன் அமல்படுத்தப் பட்டது.கட்டுப்பாடுகளை மீறியதாக 2,000 வாகனங்கள் முதல் நாளிலேயே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் லாக்டவுன்  ஆனது அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் ஆனது கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட இம்முறை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை லாக்டவுன் நிலவரத்தை ஆய்வு செய்த காவல் … Read more

வேலூரில் இனிமேல் வாரம் 3 நாட்கள் மட்டும் தான் கடைகள் திறப்பு- மாவட்ட ஆட்சியர்

வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் கொரோனா தோற்று நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் சென்னை மற்றும் 3 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்நிலையில் வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக அதிகமாக கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 408-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் … Read more