ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி கார் ஒட்டி செல்லும்படியான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. திரைப்பட ஷூட்டிங்கிற்கு அதிக வேலையாட்கள் தேவைப்படுவார்கள் என்பதாலும், திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருக்கிறது. இதனால், சினிமா பிரபலங்கள், திரை கலைஞர்கள் என சினிமா சம்பத்தப்பட்ட ஊழியர்கள் என பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சென்னையில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். […]