#Breaking: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் – ஜெ.பி.நட்டா அறிவிப்பு

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் … Read more

#Breaking: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எல் முருகன் பங்கேற்றதால் அவர் அமைச்சராகிறாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை மத்திய … Read more

“ரேவதி வீரமணி” ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் – எல்.முருகன் ட்வீட்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மதுரையை சேர்ந்த ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் எல் முருகன். டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 26 வீரர் – வீராங்கனைகள் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. இதில் ஆண்கள் பிரிவில் 17 பேர், மகளிர் பிரிவில் 9 பேர் பங்கேற்கவுள்ளனர். தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப்படகு போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டை சேர்ந்த 11 வீரர் – வீராங்கனைகள் தகுதி … Read more

#BREAKING : பிரதமரை சந்தித்த தமிழக பாஜக எம்.எல்.ஏ-க்கள்…! பேசியது என்ன…?

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, பாஜகவின் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் சந்தித்து பேசினர்.  அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் உள்ள  மகாபலிபுரம்,தஞ்சை போன்ற ஆன்மீக சுற்றுலா … Read more

தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு திமுக தான் காரணம் – எல்.முருகன்..!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வடபழனி முருகன் கோவிலில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் வழிபாடு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இன்னும் கொரோனா முடியவில்லை, நாம் இன்னும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முககவசம் கட்டாயமாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். … Read more

புதுச்சேரியில் தாமரை மலர்ந்துள்ளது… பாஜகவின் அலை தமிழகத்திலும் வரும் – எல்.முருகன்..!

தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது. புதுச்சேரியில் வந்துள்ள பாஜகவின் அலை தமிழகத்திலும் வரும் என எல்.முருகன் தெரித்துள்ளார். புதுச்சேரியில் பாஜக சார்ந்த ஒருவர் முதல் முறையாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியர்களிடம் பேசிய எல்.முருகன், தமிழ் மண்ணில் பாஜகவைச் சேர்ந்தவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். … Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிராக பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் ஜூன் 15 முதல் டாஸ்மாக் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டதல் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் சற்று குறைய தொடங்கி உள்ளதால், ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள … Read more

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றை பேசி விட்டு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது மாற்றி பேசுவது அழகல்ல – எல்.முருகன்..!

முதலமைச்சர் தன் வாக்குப்படி உயிரிழிந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ .1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிடுமாறு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என  அறிவித்தார். … Read more

தமிழகத்துக்குள் பாஜக நுழைந்தது…சட்டப்பேரவைக்கு பாஜக உறுப்பினர்கள் சென்றுவிட்டார்கள் – எல்.முருகன்

தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிட்டது என்று மேற்குவங்க வன்முறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்.முருகன் பேச்சு. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன்பின் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் … Read more

பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு…!

தாராபுரத்தில், பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு. போலீசார் குவிப்பு. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில், எல்.முருகன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழியை விட 1,393 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். … Read more