ஓபிஎஸ் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – அமைச்சர் எல் முருகன்

கொரோனாவில் இருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என அமைச்சர் எல் முருகன் ட்வீட். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான  ஓ.பன்னீர்செல்வம் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், லேசான அறிகுறிகளுடன் ஓபிஎஸ் தனி வார்டில் சிகிச்சை பெறுகிறார். தற்போது ஓபிஎஸ்-யின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓபிஎஸ்-க்கு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை … Read more

எல்.முருகன் பங்கேற்றதை அரசியலாக்க வேண்டாம் – தமிழிசை

மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே பல்கலைக்கழக விழாவில் எல் முருகன் பங்கேற்றார் என தமிழிசை தகவல். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகியிருந்தது நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டதை அரசியலாக்க வேண்டாம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா  பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்த … Read more

இளையராஜாவுக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்

அம்பேத்கரின் கனவுகளை தனது லட்சிய இலக்காக எண்ணி செயல்படுத்தி கொண்டிருப்பவர் பிரதமர் என்று உண்மையை உலகு உணரும்படி உரைத்து கூறிய இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய இணை அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன? அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் யாரும் எந்த கருத்தையும் வெளிப்படுத்த கருத்து சுதந்திரம் அனுமதிக்கிறது எனவும் கூறினார்.

#BREAKING: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

முரசொலி அலுவலக இடம் வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு. முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ளதாக எல் முருகன் கருத்து தொடர்பான வழக்கில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் ஏப்ரல் 22-ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் … Read more

710 கிலோ மீன்களை இலவசமாக வழங்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..!

பா.ஜ.க சார்பில் 710 கிலோ மீன்களை மக்களுக்கு இலவசமாக வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாள் பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜகவினர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சென்னை தண்டையார்பேட்டையில் பிரதமரின் 71-வது பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 710 கிலோ மீன்களை இலவசமாக ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார்.

அடிதூள்- 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு – இணையமைச்சர் எல்.முருகன் வழங்கினார்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை கமலாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நந்தகுமார் (கோவை), மகராஜன் (நெல்லை), சுப்பிரமணியன் (ஈரோடு), தர்மராஜ் (கன்னியாகுமரி) ஆகியோருக்கு இணையமைச்சர் எல் முருகன் இன்னோவா கார்களை பரிசளித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த நிலையில், அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன் உடனிருந்தார். … Read more

தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தயார் மறைவுக்கு எல்.முருகன் இரங்கல்…!

தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தயார் மறைவுக்கு எல்.முருகன் இரங்கல். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி அவர்கள், இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். இதனையடுத்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் திருமதி.கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். மறைந்த திருமதி கிருஷ்ணகுமாரி, மூத்த … Read more

மக்களை சந்திக்கவே மக்கள் ஆசீர்வாத யாத்திரை – இணை அமைச்சர் எல்.முருகன்

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செய்கிறேன் என்று எல் முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசீர்வாத யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவையில் தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக … Read more

ஆசீர்வாதம் யாத்திரை: நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர்!!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 10ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ’ஆசீர்வாதம் யாத்திரை’ என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை டெல்லியில் இருந்து நாடு முழுவதும் அமைச்சர்கள் ஆசிர்வாதம் யாத்திரை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த யாத்திரையின் போது, பாஜக அரசின் செயல் … Read more

எல்.முருகன் முதல் முறையாக சென்னை வருகை..!

மத்திய இணை அமைச்சர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக எல்.முருகன் சென்னை வருகை. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின் பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு  4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றனர். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், 43 புதிய … Read more