டெல்லியில் அமித்ஷா இன்று ஆலோசனை..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  அதன்படி, மாலை 3 மணிக்கு லடாக்கிலும், 4 மணிக்கு ஜம்மு காஷ்மீரிலும் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதியை தூக்கிய ட்விட்டர் நிறுவனம்..!

சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதியை தூக்கிய செயலுக்கு பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை தனி நாடாக அதில் காட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தை இதற்கு முன்னரும் தவறாக காண்பித்து மோதல் நிலவி வந்தது. அப்போது இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக் பகுதியை சீனாவின் பகுதியாக காண்பித்திருந்தது. … Read more

3 நாள் பயணமாக லடாக் சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் 3 நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் 3 நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் லடாக் எல்லையில் உள்ள பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச்சாலை கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்பு பணிகளை ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார். மேலும்,லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் அவர், ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் எல்லையில் பாதுகாப்பு … Read more

இராணுவ வீரர்களுக்கு சல்யூட் வைத்த சிறுவன்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இராணுவ வீரர்களுக்கு  அவர்களது பாணியில் சல்யூட் வைத்த சிறுவன். லடாக்கில் சுஸுல் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த நம்கியால் என்ற சிறுவன் தன்னை கடந்து செல்லும், இந்திய திபெத் எல்லை காவல்படை வீரர்களுக்கு அவர்களது பாணியிலேயே, அட்டென்ஷனில் நின்று சல்யூட் செய்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை அதிகாரி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இந்திய திபெத் எல்லை காவல் படையின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அதிகாரி இராணுவ முறைப்படி … Read more

கிழக்கு லடாக்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது – எஸ்.ஜெய்சங்கர்!

கிழக்கு லடாக்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார். ஏற்கனவே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்ற சூழ்நிலைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்த மோதலில் கிழக்கு லடாக் பகுதியில் தற்போது  நிலைமை மோசமாக உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், எல்லையின் நிலைமையை உறவு நிலையிலிருந்து இணைக்க முடியாது என கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சனையில், அண்மையில் … Read more

சீன இராணுவம் லடாக்கில் உள்ள 1000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.!

லடாக்கில் 1000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை சீன இராணுவம் ஆக்கிரமித்து கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா பாங்கோங்கிடிசா மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அத்துமீறியதாக கூறியதை அடுத்து இந்தியா – சீனா எல்லையான எல்ஏசி எனப்படும் கட்டுப்பாட்டின் கோட்டு பகுதியில் சீனா இராணுவ வீரர்களை குவித்தது. அதனையடுத்து இந்தியா – சீனா இராணுவ வீரர்களிடையில் கடந்த மே மாதங்களில் மோதல் ஏற்பட்டதை அடுத்து பல இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து சீனா இராணுவ … Read more

அதிர்ச்சி ரிப்போர்ட்.! தற்காப்புக்கலை வீரர்களை முன்கூட்டியே களமிறக்கியதா சீன ராணுவம்?!

இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுவதற்கு முன்னர், சீனா தரப்பிலிருந்து மலையேற்ற வீரர்கள் மற்றும் தற்காப்பு கலை வீரர்கள் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டனர் என சீன நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒன்றான கள்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த … Read more

சீன பொருட்கள் பயன்படுத்தப்படாது – டெல்லி தங்கும் விடுதி மற்றும் உணவக உரிமையாளர் சங்கம்

டெல்லியில் உள்ள உணவகங்களில் சீன பொருட்கள் பயன்படுத்தப்படமாட்டது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சீனாவிற்கு எதிராக இந்திய மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இதனால், சீன பொருட்களை புறக்கணிக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள உணவகங்களில் சீன பொருட்கள் பயன்படுத்தப்படமாட்டது என டெல்லி தங்கும் விடுதி மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், ஓட்டல்களில் சீன நாட்டை சேர்ந்தவர்கள் தங்குவதற்கு அறை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.