விமானப்படை அதிகாரி அமிர்தேஷ்க்கு நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவு..!

வரும் 30-ஆம் தேதி வரை லெப்டினன்ட் அமிதேஷ்க்கு நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி திலகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார்.  கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் விமானப்படை அதிகாரியை கைது … Read more

கோவையில் ரிமோட் மூலம் சிக்னலை கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகம்…!

கோவையில் ரிமோட் மூலம் சிக்னலை கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகம். பொதுவாக சாலையில் வாகன ஓட்டிகள் சீராக செல்வதற்கு சிக்னல் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல், இந்த சிக்னலுக்கு அருகே நின்று போக்குவரத்து காவல் அதிகாரிகளும் வாகன ஓட்டிகளை நெறிப்படுத்துவதுண்டு. அந்த வகையில், கோவையில், சோதனை முயற்சியாக போக்குவரத்து காவல்துறையினர் ரிமோட் மூலம், சிக்னலை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை சாலை மற்றும் திருச்சி சாலை என 52 இடங்களில் சிக்கனல்கள் உள்ளன. இதனையடுத்து, … Read more

சாதி கொடுமை : கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம்..! விசாரணைக்கு உத்தரவு…!

கோவை  மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம். கோவை  மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்,  கோபிநாத் என்பவர்  வந்துள்ளார். இவர் நிலம் சம்பந்தமான சில விவரங்களை கேட்டறிவதற்காக வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி சரியான ஆவணங்கள் இல்லாததால், சரியான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கோபிநாத் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, தகராறில் ஈடுபடும் வண்ணம் நடந்துள்ளார். அப்போது விஏஓ-வின் உதவியாளரான முத்துசாமி … Read more

‘MAY I HELP YOU’ – கோவை காவல் நிலையங்களில் பெண் காவல் வரவேற்பாளர்கள்…!

 கோவை காவல் நிலையங்களில் பெண் காவல் வரவேற்பாளர்கள். கோவை மாநகர் பகுதியில் உள்ள 15 சட்ட ஒழுங்கு காவல் நிலையங்கள், 3 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் இரண்டு போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்களில் இன்று முதல் சுழற்சி முறையில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுகின்றன. இவர்களுக்கு 18 … Read more

கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்..!

கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக எல்லையில் இ-பாஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும், கோவையில் தொற்று பாதிப்பு எதிர்பார்த்த வகையில் குறையாத காரணத்தால், கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றது. கேரளாவை ஒட்டியுள்ள 13 தமிழக எல்லைகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து … Read more

இன்று கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

இன்று, மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது சற்று பாதிப்பு குறைந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தி … Read more

நாளை கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

நாளை மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது சற்று பாதிப்பு குறைந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தி … Read more

#BREAKING: கோவை கொடிசியா கொரோனா மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

கோவை கொடிசியா வளாகத்தில் 253 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை மு.கஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் சுற்று பயணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இன்று திருப்பூரில் இருந்து தனது பயணம் தொடங்கிய மு.க.ஸ்டாலின் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி போடக் கூடிய முகாமை தொடங்கி வைத்தார். அதன்பிறகு … Read more

#BREAKING: கோவையில் யானைகள் புத்துணர்வு முகாம் அறிவிப்பு..!

வரும் 8ஆம் தேதி முதல் யானைகள் புத்துணர்வு முகாம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இம்முகாமின் துவக்கவிழா வருகின்ற 8-ஆம் தேதி அன்று காலை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் … Read more

சாந்தி சோஷியல் சர்வீஸ் மூலம் பலரின் பசி தீர்த்த “சுப்ரமணியம்”காலாமானார் .!

சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் பசியை தீர்த்த சுப்ரமணியம் காலாமானார். கோவையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்றாலே அனைவருக்கும் தெரியும் .அதன் மூலம் பல நற்பணிகளை செய்து வந்தவர் சுப்ரமணியம் . இவர் 1972-ம் ஆண்டு சாந்தி கியர்ஸ் நிறுவனம் என்பதை தொடங்கி அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு இயந்திர உதிர பாகங்களை தயாரித்து கொடுத்து வளர்ச்சியடைந்தார் . அதனையடுத்து 1996-ம் ஆண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பினை துவங்கிய … Read more