தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளை இழந்த ஸ்மித் .! முதலிடத்தை தொடரும் கிங் கோலி .!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளை இழந்து மீண்டும்  2-வது இடத்தில் உள்ளார். சுமித்தை விட கோலி 17 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய … Read more

ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றிய கோலி ..!

ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி  இந்திய அணி கேப்டன் கோலி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். கோலி 928 தரப்புள்ளியுடன் முதலிடத்திலும் ,  ஸ்மித் 923 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது.இந்த பட்டியலில் இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி  இந்திய அணி கேப்டன் கோலி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். வங்காளதேசத்திற்கு கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் … Read more

இரண்டாவது டெஸ்ட் : அபார சதம் விளாசிய கோலி ..!

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நேற்று முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து இறங்கிய இந்திய அணியின் … Read more

தோனி பிறகு அந்த சாதனையை நான் படைப்பேன் -விராட் கோலி சபதம்..!

தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுவேன் என கூறியுள்ளார். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான வருடமே தோனி தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றவில்லை. அப்படியே இறுதிவரை சென்றாலும் கடைசியில் … Read more

தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றம்..!கோலிக்கு இன்னும் ஒரு புள்ளிதான்..!

ஐசிசி டெஸ்ட்  தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஒரு வருடமாக முதல் இருந்தார். தடைக்குப் பின் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி  937புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். இதனால் இந்திய அணி கேப்டன் கோலி 899 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தால் ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்று. புள்ளி பட்டியலில் … Read more

இந்த வருட டெஸ்ட் போட்டியில் கோலிதான் முதலிடம்..!

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில்  நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 336 பந்திற்கு 254 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 33 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.இதன் மூலம் இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக  ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம். விராட்கோலி – தென்னாப்பிரிக்கா= … Read more

உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் முதல் இரட்டை சதம் கேப்டன் கோலி ..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே நேற்று முதல்  டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி சதம் அடித்து இருந்த நிலையில் தற்போது 297பந்தில் 200 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடித்து உள்ளார்.இதில் 28 பவுண்டரி அடங்கும். … Read more

2-வது டெஸ்டில் கோலி சதம் ..! ரஹானே அரைசதம் விளாசல் ..!

இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புனேவில் தொடங்கியது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா, மயங்க அகர்வால் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே ரோஹித் 14 ரன்களில் வெளியேற பின்னர் புஜாரா ,  மயங்க அகர்வால் இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 58 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் நிதானமாக விளையாடி … Read more

சச்சின் சாதனையை முறியடித்த விராட்கோலி ..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி  3 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்தனர். இப்போட்டியில் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து 108 ரன்கள் எடுத்தார்.  பின்னர் இறங்கிய புஜாரா  நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 58 ரன்களுடன் வெளியேறினார். களத்தில் விராட்கோலி 63 , ரஹானே 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இன்று … Read more

டெஸ்ட் போட்டியில் கேப்டனாக கோலி மூன்றாம் இடம் ..!

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டிவிசாகப்பட்டினத்தில் நடை பெற்றது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 431 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.இதனால் இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில்  323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக … Read more