சபரிமலை விவகாரம் கேரள சட்டசபையில் கூச்சல் குழப்பம்…!!

சபரிமலை விவகாரம் தொடர்பாக அவசரமாக கூடிய கேரள சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்பக்கூடாது, தங்கக்கூடாது என்பன உள்ளிட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. இவற்றை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கேரள சட்டப்பேரவை அவசரமாக கூடியது. சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரச்சினை கிளப்பியதால் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்கள் கைகலப்பில் … Read more

நில்லு நில்லு சேலஞ்ச் …கேரளாவை கலக்கும் புது டான்ஸ்….சமூக வலைதளத்தில் வைரல்…!!

கேரளாவில் இளைஞர்களிடையே பிரபலமாகி வரும் நில்லு நில்லு சேலஞ்ச் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உலகளவில் பல்வேறு சேலஞ்சுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதுதான் தற்பொழுது டிரெண்ட். இந்த வரிசையில் தற்பொழுது கேரளாவை கலக்கி வருகிறது நில்லு நில்லு சேலஞ்ச்.ஓடும் பேருந்துகள் உள்ளிட்டவற்றை திடீரென மறித்து, தலையில் ஹெல்மெட் அல்லது கைகளில் காய்ந்த இலைகள் மற்றும் குச்சிகளை பிடித்தபடி நடனமாடுவதுதான் நில்லு நில்லு சேலஞ்ச். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. DINASUVADU.COM  https://youtu.be/T7avtbv7-20

சபரிமலையில் 30 -ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு…!!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் தொடர்வதால், 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சபரிமலையில் வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதை கட்டுப்படுத்த சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு கடும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உத்தரவை அமல்படுத்துவதற்கு … Read more

கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் ராஜினாமா…!!

கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மேத்யூ தாமஸுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த … Read more

சபரிமலையில் பெண்களுக்கு 2 நாட்கள்…கேரள அரசின் அடுத்த முயற்சி…!!

சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்களை ஒதுக்க தயாராக இருப்பதாக, கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை … Read more

அமைச்சருக்கு எதிராக அவதூறு…அர்ச்சகர் சஸ்பெண்ட்..கேரளாவில் அடுத்த சர்சை…!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.கேரளா அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமுல்படுத்துவதில் பல்வேறு முயற்சியை எடுத்து வருகிறது.குறிப்பாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சபரிமலை பிரச்சினை தொடர்பாக அம்மாநில  தேவசம் அமைச்சரை கோவில் அர்ச்சகர் விமர்சனம் செய்து  பேஸ்புக்கில் வெளியிட்டார். அர்ச்சகர் மாதவ நம்பூதிரி மோசமான வார்த்தைகளுடன் விமர்சனங்களை … Read more

சபரிமலை கோயில் வளாகத்திற்குள் 144 தடை உத்தரவு ஏன் ? …உயர் நீதிமன்றம் கேள்வி..!!

சபரிமலையில் எதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், கோயிலுக்குள் பெண் பக்தர்கள் நுழைய முயலும் போது, அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதால், சபரிமலை கோயில் வளாகத்துக்குள் காவல்துறையினர் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த … Read more

சபரிமலைக்கு செல்ல மத்திய அமைச்சர் பொன்.ராதாவுக்கு அனுமதி மறுப்பு…!!

சபரிமலைக்கு வழிபாடு செய்ய சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட இளம்பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொண்டர்களுடன் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு வழிபாடு செய்யச் சென்றார். அவரை நிலக்கல்லில் தடுத்து நிறுத்திய கேரள போலீஸார் தொண்டர்களுடன் பம்பைக்கு செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரையும் … Read more

சபரிமலையில் பெண்களுக்கு எந்த வசதியும் இல்லை…அமித் ஷா குற்றச்சாட்டு..!!

அய்யப்ப பக்தர்களை வதை முகாம்களில் உள்ளவர்களை போல் கேரள அரசு நடத்துவதை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சபரிமலை விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பா.ஜ.க தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்து டுவிட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உணர்வு பூர்வமான சபரிமலை விவகாரத்தை கேரள அரசு கையாளும் முறை ஏமாற்றத்தை அளிப்பதாகவும், இளம்பெண்கள், தாய்மார்கள், வயதானவர்களுக்கு உணவு, தங்குமிடம், கழிப்பிடம் போன்ற எந்த வசதியும் செய்து தராமல் கேரள போலீஸார் அவர்களை … Read more

தமிழகத்துக்கு துணை நிற்போம்…கேரள அரசு ஆதரவு…!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் என கேரள அரசு ட்வீட் செய்து அறிவித்துள்ளது. கஜா புயலால், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதங்களை சத்தித்துள்ளன. அப்பகுதிகளில் தமிழக அரசு தீவிர மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு துணை நிற்போம் என்று கேரள அரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.குடிநீர், போர்வைகள், மெழுகுவர்த்திகள், உணவுப் பொருட்கள் மற்றும் மக்கள் அணிந்துகொள்ள புதுத் துணிகளும், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு … Read more