தி.மு.க. அரசின் வரவு-செலவு பட்ஜெட் தனி வரலாறு படைத்துள்ளது! – ஆசிரியர் கி.வீரமணி

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். ஆசிரியர் கி.வீரமணி ட்வீட் தமிழக பட்ஜெட் குறித்து … Read more

கே.சி.வீரமணியின் ஊழல்களை விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் – அமைச்சர் மூர்த்தி

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஊழல் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு. ஜோலார்பேட்டையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 16ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பணம், நகை, முக்கிய ஆவணங்கள் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளிட்ட 9 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை மூலம் … Read more

கே.சி.வீரமணி தொடர்புடைய இடங்களில் பணம், நகை, ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, சொகுசு கார்கள் பறிமுதல். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் … Read more

இது நாடு, காடு அல்ல… காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது – அதிமுக

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை என அதிமுக அறிக்கை. விடியா அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம், அது வளர்ச்சிக்கு அறிகுறி. நாம் மக்கள், வன விலங்குகள் அல்ல. இது நாடு, காடு அல்ல. காட்டு முறையைக் கையாண்டால் … Read more

#Breaking:”இந்த ரெய்டு பழிவாங்கும் நோக்கில் திமுக அரசால் நடத்தப்பட்டுள்ளது” -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது குறித்து எந்தவொரு ரெய்டுக்கும்,பயப்படாத இயக்கம் அதிமுக என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாகக் எழுந்த புகாரின் பேரில் இன்று காலை 6.30 மணி முதல் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில்,இந்த … Read more