“10 வாரங்களில் தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்”- மதுரை கிளை நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடந்தது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை தொல்லியல் துறை ஆய்வு செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக நடவடிக்கையை 10 வாரங்களில் தொல்லியல்துறை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த கடம்பூர் ராஜூ.!

கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்துள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து கனமழை காரணமாக ஒரு வாரம் முன் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது நிலச்சரிவிலிருந்து மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக  உயர்ந்துள்ளது. இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் … Read more