#BREAKING: காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு ..!

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரி -குண்டாறு இணைப்பு மூலம் தமிழகத்தில் கூடுதலாக 45 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் எங்களுக்கு காவிரி இருந்து கிடைக்கக்கூடிய தண்ணீர் அளவு குறைந்துவிடும் என்ற காரணத்தினால் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரி ,குண்டாறு, வைகை அணை இணைப்பு திட்டத்தால் வெள்ள காலங்களில் காவிரியில் உபரி நீராக … Read more

திருச்சி : முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடத்திற்கு நீர் திறப்பு!

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் நேற்று 35,000 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றபட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது 45ஆயிரம் கன அடி நீர் திருச்சிக்கு முக்கொம்பு அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதில்  3 ஆயிரம் கனஅடியில் இருந்து 12 ஆயிரம் கனஅடி நீர் வீதம் கொள்ளிடம் ஆற்றுக்கு … Read more

காவேரி செல்லும் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் அளவிடும் கருவி! எதிர்க்கிறதா கர்நாடக அரசு!?

காவேரி ஆறு செல்லும் வழியில் உள்ள நீர்த்தேக்க நிலையங்களில் தானியங்கி நீர் அளவிடும் கருவிவை பொறுத்த, காவிரி ஒழுங்காற்று துணை குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. இந்த தானியங்கி கருவி மூலம் காவேரி ஆறு நீர்தேக்கணக்காண தமிழ்நாட்டு மேட்டூர் அணை, கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, க்ரிஷ்ணராஜ சாகர் ஆணை ஆகியவற்றில் எவ்வளவு நீர் உள்ளது என்பதை ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாக … Read more

தமிழகத்திற்கு மழை வந்தால்தான் தண்ணீர்! கர்நாடக அமைச்சர் பேட்டி!

கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவகவுடாவும், அவரது மகனான ரேவண்ணாவும் தஞ்சாவூர் சாரங்கபாணி ஆலயத்திற்கு தரிசனத்திற்க்காக வந்தனர். ரேவண்ணா தான் கர்நாடாக பொதுப்பணித்துறை அமைச்சர். ஆதலால் அவரிடம் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு தமிழகத்திற்கு காவேரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது முதலில் மறுத்த அவர் பின்னர், கர்நாடகாவில் மழை பெய்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என கூறினார். DINASUVADU

சிறிது நேரத்தில் திறக்க இருக்கிறது மேட்டடூர் அணை..

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.இந்த உபரி நீர் அதிகமாக வருவதால் ஒகேனக்கல் அணை நிரம்பி வருகிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் பல அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.ஒகேனக்கலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காவிரி டெல்டா பாசனத்திர்காக மேட்டூர்  அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.முதல்வர் தண்ணீர் திறந்து விடுவது இதுவே முதல் முறை.இன்று காலை 10 மணி அளவில் முதல்வர் … Read more

நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு.!கர்நாடகா காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

குடகு மாவட்டத்தில் 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தலைக்காவிரி பகுதியில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல் ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி வீதம் நீர் வருகிறது. கர்நாடக அணைகள் … Read more

மணல் கடத்திவந்த லாரி பிடிபட்டது..

பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே தட்டுமால் காவிரி படுகை பகுதியில் பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், விஏஓக்கள் சிவப்பிரகாஷ், கனகராஜ் உள்ளிட்டவர்கள் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசின் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. உடனே லாரி டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேட்டுர் அணையின் நீர்மட்டம் உயர்வு..,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,429 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம், விநாடிக்கு 5,060 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 5,429 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டுர் அணைக்கு  நீர்வரத்து தொடர்ந்து வருவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம், 35.84 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 36.72 அடியாக உயர்ந்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய…!!! பாரதிராஜா, வைரமுத்து மீது வழக்குப்பதிவு…!!!

காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது தொடர்பாக, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் சாலை மறியல் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து, சீமான், தமீமுன் அன்சாரி, பி.ஆர். பாண்டியன், அமீர், கருணாஸ் ஆகியார் மீது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் திருவல்லிகேணி காவல் நிலைய போலீஸாரால் வழக்கு … Read more

புதுச்சேரியில் மார்ச் 8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: காவிரி பிரச்சனையா??

மார்ச் 8-ம் தேதி  புதுச்சேரியில் அந்த யூனியன் பிரதேசத்தின் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பாக , காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலம், தமிழகத்திற்கு  177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது. … Read more