ஒகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு வருகை!

ஒகி புயல் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்படும் என ராஜ்நாத் உறுதி என மக்களவை துணை சபா நாயகர்  தம்பிதுரை தகவல்.

ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அனைத்து வங்கிகளும் கடன்அளிக்க வேண்டும்!

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை பழுது பார்க்க மீனவர்களுக்கு அனைத்து வங்கிகளும், வங்கி கடன் அளிக்க வேண்டும் – இந்தியன் வங்கியின் அகில இந்திய ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம்

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!வானிலை மையம் தகவல் …

வங்க கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மழைக்கு வாய்ப்பு இல்லை – வானிலை ஆய்வு மையம்

மீனவர் மீட்பு பணி கடைசி மீனவர் மீட்க்கும் வரை நடைபெறும்!அமைச்சர் ஜெயக்குமார் …

கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடுதல் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் – அமைச்சர் ஜெயக்குமார் . 56 படகுகள் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகம் முழுவதும் மெகா லோக் அதாலத் தொடக்கம் !

தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத்தின் ஒரு பகுதியாக மெகா லோக் அதாலத் தொடங்கியது 10 வகையான 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை, கீழமை நீதிமன்றங்களில் 530 அமர்வுகளில் விசாரணை

மின் கட்டணம் செலுத்த கன்னியாகுமரி மக்களுக்கு கால அவகாசம்

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இயல்பு வாழக்கைக்கு திரும்ப பெரும் அவதி பெற்று வருகின்றனர். அதலால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் முதலில் டிசம்பர் 18ஆக இருந்தது, தற்போது இந்த கால அவகாசம் ஜனவரி 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு…!

கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு… ஒக்கி புயலின் தாக்கத்தால் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 20 இலட்சமும் காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் 5 இலட்சமும் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என கேரளா இடது முன்னணி அரசு அறிவித்துள்ளது.

ஓகி புயல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓகி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது. மேலும் இன்னுமும் சில கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரபட்ட வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட … Read more

நெல்லை எனக்கு எல்லை…குமரி எனக்கு தொல்லை…. காணவில்லை எம்.எல்.ஏக்கள்…!

  ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய 6 MLAகளையும் புயலுக்கு பிறகு காணவில்லை????? 1.கன்னியாகுமரி சடமன்ற உறுப்பினர்-எஸ்.ஆஸ்டின் (திமுக) 2.நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் -என்.சுரேஷ் ராஜன் (திமுக) 3.குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்-ஜே.ஜி .பிரின்ஸ் (காங்) 4.பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்-டி.மனோ தங்கராஜன் (திமுக) 5.விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.விஜயதரணி(காங்) 6.கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.ராஜேஷ் குமார்(காங்) அவர்கள் அனைவரையும் யாராவது பார்த்தல் கன்னியாகுமரி மக்கள் ஓக்கி புயல் … Read more

3 கப்பல்கள் 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில்… : அமைச்சர் ஜெயக்குமார்

ஓகி புயல் காரணமாக  கடலுக்குள் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 85மீனவர்களை காணவில்லை அவர்களை மீட்கும் பணிகள் குறித்துஅமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘கடல்நீரோட்டம் காரணமாக அவர்கள் வேறு பகுதிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. காணமல் போன மீனவர்களை தேடும் பணியில் 3 கபல்கள், 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.’ என கூறினார்.