கழுகு-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில், கடந்த 2012-ம் ஆண்டு கிருஷ்ணா, பிந்து மாதவி  நடிப்பில் வெளியாகி, மாபெரும் வெற்றியை கண்ட திரைப்படம் ‘கழுகு’. தற்போது இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான சில நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.