ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகள் – ஜோ பைடன் ட்வீட்

தனது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்று அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் முதல் காலநிலை மாற்றம், இன நீதி வரை நமது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. அடுத்தாண்டு சீக்கிரம் வரட்டும், வீணடிக்க நேரம் இருக்காது. அதனால்தான் நானும் எனது அணியும் முதல் நாளில் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம் என்று பைடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காலவரையறை … Read more

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ள ஜோ பைடன்

துணை அதிபர் மைக் பென்ஸ் இன்று  கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உள்ளதாகவும் ,அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன்  அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதனிடையே இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை துணை … Read more

‘அமெரிக்காவின் கதை மாறுகிறது’ – 2020-ம் ஆண்டின் நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் அதிபராக தேர்வு ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இருவரும், 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இருவரும், 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, இவர்கள் இருவரின் புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிட்ட டைம் இதழ், ‘அமெரிக்காவின் கதை மாறுகிறது’ என தலைப்பிட்டு உள்ளது. … Read more

2020-ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் ஜோ பைடன்,கமலா ஹாரிஸ் -டைம் இதழ் தேர்வு.!

2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபராக பதிவியேற்க உள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை டைம் இதழ் தேர்வு செய்துள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனமான டைம் ஒவ்வொரு வருடமும் திறமையாக செயல்பட்டு செய்திகளில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படுவது வழக்கம் .இது கடந்த 1927-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக விரைவில் … Read more

வளர்ப்பு நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு!

அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடும் போது தவறி விழுந்ததில், காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், வரும் ஜனவரி மாதத்தில் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது பைடனுக்கு 78 வயதாகிறது. இந்நிலையில், ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு டைகர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பைடன், டைகருடன் விளையாடும் போது, கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து … Read more

ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல். கடந்த நவ.3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இதில் பைடன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்ற நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள பைடனுடன், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர்  பக்கத்தில்,’அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ … Read more

அமெரிக்க அதிபராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து!

அமெரிக்க அதிபராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து. கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில், அதிக வாக்குகளை பெற்று ஜோ பைடன் வெற்றிக்கனியை தட்டி சென்றார். இந்நிலையில், ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு பிற நாட்டை சேர்ந்த அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சீன அரசு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த வாழ்த்தின்படி, சீன வெளியுறவு … Read more

ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவு ! பைடனின் வெற்றியை பாதிக்குமா ?

டிரம்ப் தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அம்மாகாண அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தல் :  கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.ஆனால்  ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, … Read more

வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியை நியமித்த ஜோ பைடன்!

வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக ரோன் க்ளையினை ஜோ பைடன் நியமித்துள்ளார்.  உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களின் கூட்டணி, அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்க உள்ளனர். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும், அது … Read more

அமெரிக்க அதிபரான ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் சீனா!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனின் வெற்றியை சீனா ஏற்க மறுப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைதொடர்ந்து ஜோ பைடனின் ஆதரவாளர்கள், கொண்டாடி வருகின்றனர். மேலும், பைடன் மற்றும் கமலா … Read more