பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  2 போலீசார் உயிரிழப்பு..!

நாளை நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினம்  கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயங்கரவாதிகள் சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், ஜம்மு காஷ்மீரில்  உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  இரண்டு போலீசார் உயிரிழந்தனர். ஒருவர் … Read more

சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும்- ராகுல் காந்தி ட்வீட்

அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேற்கண்ட மூவர் … Read more

கமாண்டர் மசூத் சுட்டுக்கொலை.! பயங்கரவாதிகள் இல்ல மாவட்டமாக மாறிய தோடா.!

காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள  குல்சோஹர் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற  பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் உள்ளிட்ட 3 பேர்  சுட்டு கொல்லப்பட்டனர். இது குறித்து டிஜிபி  தில்பாக் சிங் கூறுகையில், இன்று நடந்த மோதலில் கமாண்டர் மசூத் மற்றும் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால், தோடா மாவட்டம் பயங்கரவாதி இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தோடா மாவட்டத்தை சேர்ந்த மசூத் மீது … Read more

எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை – விடுதலையான பரூக் அப்துல்லா பேட்டி

எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.எனவே ஸ்ரீநகரில் … Read more

#Breaking : 7 மாதங்களுக்கு பிறகு பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

பரூக் அப்துல்லா வீட்டுக்க்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.   இந்நிலையில் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் … Read more

கொரோனா வைரஸ் எதிரொலி ! பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை

காஷ்மீரில்  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .மேலும் காஷ்மீரில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் செல்போன் சேவை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் சேவைகள்,இணையசேவைகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட  சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று  காஷ்மீர் முதன்மை செயலர் ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.இது மட்டும் அல்லாது காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை … Read more

எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும்-மு.க.ஸ்டாலின்

ஒண்டி வீரன் நினைவு தினத்தையொட்டி  நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆங்கிலேய தளபதியை போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன்.அதிமுக ஆட்சியில் பால் விலை 3-வது முறையாக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? என்றும்  கேள்வி எழுப்பினார். எந்த … Read more

இனி காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும்-அமித் ஷா நம்பிக்கை

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பணியை விளக்கும் விதமாக  லிசனிங், லேர்னிங் & லீடிங் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தமிழக முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ,நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன்.இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது . … Read more

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் யார் ? போட்டியில் இருக்கும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி!

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கான போட்டியில் தமிழக ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் இருக்கிறார். கடந்த 6 ம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. லடாக் சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாக இருப்பதால் அங்கு ஆளுநர் தேவையில்லை. ஜம்மு காஷ்மீர் பகுதியளவு சட்டப்பேரவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு துணை நிலை ஆளுநர் … Read more