அரை நூற்றாண்டிற்கு பிறகு ஜம்முவில் சீரமைக்கப்படும் மன்சார்..கையில் எடுத்தது மத்திய சுற்றுலாத்துறை

70 ஆண்டுகளுக்கு  பிறகு ஜம்முவில் மன்சார் ஏரி சீரமைக்கப்பட்டு 20 லட்ச சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் உள்ள மன்சார்  ஏரி வளர்ச்சித் திட்டத்தை, மத்திய வடகிழக்கு பிராந்தியங்களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய.ஜிதேந்திர சிங் மன்சார் பகுதி மக்களுக்கு இன்றைய நாள் ஒரு வரலாற்று  சிறப்பு மிக்க நாளாகும். 70 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்  மன்சார்  ஏரி வளர்ச்சித்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த 6 … Read more

3.7 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நிலநடுக்கம்!

3.7 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் இன்று காலை 8 . 19 மணி அளவில் குறைந்த தீவிரம் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 3.7 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் நீளம் 73.94 ஆகவும், அகலம் 36.55 ஆகவும் இருந்துள்ளது. குல்மார்க் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு … Read more

ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு.!

ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ரம்பன் மாவட்டத்தில் கன மழை பெய்ததால் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டடு போக்குவரத்து பாதிகப்பட்டது. மேலும் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை துணை ஆய்வாளர் அஜய் ஆனந்த் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நெடுஞ்சாலையை சீர் செய்வதற்காக சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தங்களது பணியை தொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.  

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத கூட்டத்தை சேர்ந்த மூவர் கைது!

ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா எனும் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாத கூட்டத்தை சேர்ந்தவர்கள் மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பண்டிபோரா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின்பேரில் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த பயங்கரவாத கூட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மூவரையும் கைது செய்தது பொலிஸாருக்கு வெற்றியாக அமைந்துள்ளது, ஏனென்றால் மற்ற தீவிரவாதிகளை இவர்களை வைத்து பிடித்துவிடலாம். கைது செய்யப்பட்டவர்கள் ப்ரார் குல்சார், மொஹமட் வக்கார் … Read more

ஜம்முவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள  தின்சுகியா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து காஷ்மீர் போலீசாரும், ராணுவத்தினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கிய வீட்டைச் சுற்றி இன்று காலை அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துபபாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு ஏராளமான படைவீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. ஆபரேஷன் வைப் அவுட் என்ற பெயரில் கடந்த ஒருவாரத்தில் சுமார் 20 தீவிரவாதிகளை … Read more

எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை – விடுதலையான பரூக் அப்துல்லா பேட்டி

எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.எனவே ஸ்ரீநகரில் … Read more

ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் சிக்கிய தீவிரவாதி

ஜம்மு காஷ்மீரில்  ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர் .இந்த சோதனையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்யப்பட்டர்.  கைது செய்யப்பட்ட  பயங்கரவாதியை போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

வெளிமாநில சிறையில் 150 காஷ்மீர் இளைஞர்கள்..!

காஷ்மிருக்கு சிறப்பு சேர்க்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ கடந்த மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெறிவிப்பார்கள் என்று முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் தொலைபேசி மற்றும் இணையதள வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தடுப்பதற்காக ஏராளமான … Read more

ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை….!!

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு வகையான தொடர் தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு அப்பாவி பொதுமக்கள் , பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பது வாடிக்கையாக இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப்படை இடையே  துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகின்றது. புத்காமின் கோபால்போரா என்ற பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துல்லிய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களிடம் இருந்த வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் பாதுகாப்புபடையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. கடந்த ஆண்டில்  மட்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நிகழ்த்திய தாக்குதல்களில் 50 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் பலமுறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானின் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு  இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடிக் கொடுத்துள்ளனர்.