சென்னையை சூழ்ந்த கருமேகங்கள்.! இன்று இரவு வரை கனமழை தொடரும். – தனியார் வானிலை.!

Michaung Cyclone - Chenai flood

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான இடஙக்ளில் மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது . அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள், மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயலாந்து நாளை முற்பகல் தான் கரையை கடக்கும் என்பதால் இன்னும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய … Read more

மிரட்டும் மிக்ஜாம் புயல்… தமிழகம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்… வெளியான முக்கிய தகவல்..

fire fighters

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் புயலாக உருவெடுத்துள்ளது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர புயலாக கரையை கடக்கிறது. அதன்படி, மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் … Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி… சென்னையில் 20 விமானங்கள் ரத்து!

chennai flights

கடந்த 27 ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையடுத்து, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்று தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் நிலை கொண்டுள்ளதாகவும், மணிக்கு சுமார் 8 கிமீ வேகத்தில் … Read more

மிக்ஜாம் புயல்.! 23 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

Michaung Cyclon - Heavy rain

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 130 கிமீ தூரத்தில் உள்ள புயலாந்து 14கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதால் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையே நாளை காலை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நேற்றும் இன்றும் சென்னை சுற்றுவட்டார பகுதியில் அதீத கனமழை காரணமாக நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்றிரவு … Read more

மிக்ஜாம் புயல்: 14 சுரங்கப்பாதை மூடல்.. 6 ரயில்கள் ரத்து.!

Tunnel closure

மிக்ஜாம் புயலாக (Michaung Cyclone) வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை நேற்று முதல் கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல் மணிக்கு 14 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் … Read more

வேகமெடுக்கும் புயல்..! சென்னையை புரட்டி போட்ட கனமழை.! பொதுமக்கள் கவனத்திற்கு…. 

Michaung Cyclone - Chennai flood

வங்கக்கடலில் நிலைகொண்டு சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது மிக்ஜாம் புயல் (Michaung Cyclone). சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல் மணிக்கு 14 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்ய தொடங்கிய அதீத கனமழையானது இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை அகற்றும் … Read more

மிக்ஜாம் புயல்.! அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.! 

MK Stalin says about Rain Precaution

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை … Read more

நெருங்கும் புயல்.! விபத்துக்கள் – அபாயம்.! பொதுமக்களுக்கு அரசின் கடும் கட்டுப்பாடுகள்…

Michaung Cyclone - Govt release Precautions

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் வடதமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் காரணத்தால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும், நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டு 2 நாள் நிர்வாக காரணங்களுக்காக “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், பால், உணவு, மருத்துவம் தவிர இதர … Read more

தீவிரமடையும் மிக்ஜாம் புயல்.! 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.! 

Red Alert for chennai

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த புயலானது சென்னையில் இருந்து 290 கிமீ தொலைவில் இந்த புயலானது நிலை கொண்டுள்ளதால் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதன் காரணமாக நிர்வாக காரங்களுக்குகாக “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை … Read more

5 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் மிக்ஜாம் புயல்..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  ‘மிக்ஜாம்’ புயல் சென்னைக்கு 290 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு -தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே புயல் கரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும்,  சில நிமிடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கூட காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more