ஜிம்மிற்கு செல்வோருக்கு மாரடைப்பு வருமா..? நிபுணர் பதில்..!

யார் பலமானவர்கள்..? ஆரோக்கியமான உடலைக் கொண்டு தொடர்ந்து ஜிம்மிற்குச் செல்பவரா..? மனதளவில் ஆரோக்கியமாக உள்ளதவர்களா..? இந்த கேள்வி சமீபத்திய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, நேற்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வழக்கைக் கவனியுங்கள் அவர் மட்டும் 46 வயதில் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை. கடந்த மாதம் நடிகர் சித்தார்த் சுக்லா (41), மற்றும் கடந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (36) மாரடைப்பால் காலமானார். 20-25 ஆண்டுகளுக்கு முன்பு 30 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதினருக்கு 6 … Read more

“எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை;நன்றாக இருக்கிறேன்” – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்…!

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்ததாகவும்,இதனால்,ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை செய்யப்பட்டு நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.மேலும்,இன்சமாம் தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில்,இன்சமாம் உல் ஹக் தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்றதாகவும் தெரவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது யூ-டியூப் பக்கத்தில் கூறியதாவது: “எனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்ததற்காக பாகிஸ்தானிலும் … Read more

திடீர் நெஞ்சுவலி;தீவிர கண்காணிப்பில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்..!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், பேட்டிங் வீரருமான இன்சமாம் உல் ஹக்குக்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது.இதனால், லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் ஏதும் தெரியவில்லை.இதனையடுத்து, மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து,மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து,51 வயதான இன்சமாம்க்கு,ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. … Read more

மாரடைப்பு எச்சரிக்கை : இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள் ….!

தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு ஒரு சாதாரணமான நோயாக மாறிவிட்டது. மாரடைப்பால் தினமும் பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்த மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? கடந்த 2 வருடத்தில் இளைஞர்களுக்கு அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு காரணம் புகைபிடித்தல் பழக்கமும், மன அழுத்தமும் தான் என கூறப்படுகிறது. மேலும், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. நமது இதயத்தில் இருந்து இரத்தம் சரியான நேரத்தில் ஆக்ஸிஜனை உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு … Read more

மிக உயரமான அமெரிக்க மனிதர் மாரடைப்பால் மரணம்…!

அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் எனும் புகழ்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த அசாதாரணமான உயரம் கொண்டவர் தான் இகோர் வோவ்கோவின்ஸ்கி. இவர் 7 அடி 8 அங்குல உயரம் கொண்டவர். அதாவது 234 சென்டி மீட்டர் உயரம் கொண்டவர். இவர் தன்னுடைய அதிகப்படியான உயரத்திற்காக 27 ஆவது வயதில் அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாக இவருக்கு இதயநோய் … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் – ஆய்வில் தகவல்!

கொரோனா பாதிப்பிற்கு பின் இரண்டு வாரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுதும் குறையாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வின்படி, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு 3,48,481 … Read more

பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு..!-பயணிகளை காப்பாற்றிய பிறகு உயிரிழப்பு..!

ஈரோடு மாவட்டத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் பயணிகளை காப்பாற்றிய பிறகு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மணியன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வயது 52. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று இவர் கவுந்தபாடியிலிருந்து பெருந்துறைக்கு பேருந்தில் பயணிகளோடு புறப்பட்டுள்ளார். சென்று கொண்டிருக்கும் பொழுது வெள்ளாங்கோயில் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பேருந்தை இயக்கும் பொழுது அவருக்கு … Read more

103 வயதுடைய சுதந்திர போராட்ட போராளி எச்.எஸ்.துரைசாமி காலமானார்!

சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி பிறந்தவர் தான் இந்திய சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி. இவர் 1943ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சுதந்திரப் போராட்ட போராளியாக 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பும் தொடர்ந்து சமூக ஆர்வலராக பணியாற்றிவந்த எச்.எஸ்.துரைசாமி அவர்களுக்கு கடந்த மே 8-ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக … Read more

சதுரங்க வேட்டை பட நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பு காரணமாக காலமானார்…!

தமிழில் சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் காலமானார்.இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக,கடந்த மாதம் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அதன்பின்னர்,நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக காலமானார்கள்.மேலும்,நடிகர்கள் நெல்லை சிவா,ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நடித்த நடிகர் மற்றும் … Read more

மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் உரிமையாளருக்கு மாரடைப்பு..!ஐசியூ பிரிவில் அனுமதி..!

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி மாரடைப்பு காரணமாக,ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமி மாரடைப்பு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்த பிரபல இயக்குநர் ராம நாராயணனின் மகனான முரளி,தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு தேனாண்டாள் நிறுவனத்தின் மூலம் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றார். அந்த வரிசையில்,கடந்த 2017-ஆம் ஆண்டு முரளி தனது … Read more