குஜராத்: கார் ஒன்று லாரியில் மோதி 5 பேர் பலி..!

குஜராத்தில் உள்ள மோர்பியில் கார் ஒன்று லாரியில் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மோர்பி-மாலியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்ப்டி கிராமத்தின் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதாகவும் கார் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராதிகா பாரி கூறியுள்ளார். மாலியாவிலிருந்து மோர்பி நகரை நோக்கி ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து மோர்பி தாலுகாவில் உள்ள … Read more

21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்திய சென்னை தம்பதிகள் குஜராத்தில் கைது…!

21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்திய சென்னை தம்பதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா எனும் துறைமுகத்தில் 3000 கிலோ எடை உள்ள சுமார் 21,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதை பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த தம்பதிகள் இருவரை வருவாய் புலனாய்வு துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆந்திர நிறுவனம் ஒன்றிலிருந்து … Read more

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!

குஜராத்தில் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கு துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல். குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா தனியார் துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயினை அகமதாபாத் மண்டலத்தின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போதைப்பொருள் முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் மூலம் துறைமுகத்தில் சோதனை செய்ததில் இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக … Read more

குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின்..!

குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.  வருமானவரி புலனாய்வு இயக்குனரகம் குஜராத்தின் கட்ச் நகரின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கொண்ட கொள்கலன்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இவை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக சரக்குகளை நிறுத்திய அதிகாரிகள், சோதனையின் போது​டால்கம் பவுடர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இவை ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள … Read more

“பொதுச் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த காரிய கர்த்தாக்கள்” – பிரதமர் மோடி..!

குஜராத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குஜராத்தில் விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார்.  திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர், எந்த எதிர்ப்பின்றி பூபேந்திர படேல் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு  கடந்த 13-ஆம் தேதி காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்று கொண்டார். இதனையடுத்து,இன்று குஜராத் ஆளுநர்  புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து … Read more

#BREAKING: குஜராத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்..!

குஜராத்தின் புதிய அமைச்சரவையில் 24 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குஜராத்தில் விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார்.  திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர், எந்த எதிர்ப்பின்றி பூபேந்திர படேல் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு  கடந்த 13-ஆம் தேதி காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்று கொண்டார். இந்நிலையில், குஜராத் ஆளுநர்  புதிய … Read more

#Breaking:குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ராஜினாமா..!

குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்த நிலையில்,கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீரென ஆளுநரை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.அதன்பின்னர்,கடந்த 13 ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர … Read more

#BREAKING: குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு..!

குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் … Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17% லிருந்து 28% ஆக உயர்வு..!

குஜராத் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது. குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 11 சதவிகிதம் உயர்த்த குஜராத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு அடிப்படையில் 17 சதவீதமாக அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. குஜராத் அரசாங்கத்தால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மத்திய அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கியதற்கு இணையாக உள்ளது. இந்த மத்திய அரசு ஜூலை மாதத்தில், ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 … Read more

வருகின்ற செப்.2 முதல் 6-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!குஜராத் அரசு அறிவிப்பு..!

குஜராத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 6-8 ஆம் வகுப்புகளுக்கு  பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை … Read more