தன்மானம் இருக்கா?? இருந்தா இருப்பாரா?? பவார் பாய்ச்சல்

சுயமரியாதை இருந்தால் கவர்னர் பதவியில் தொடருவாரா? என்பது குறித்து கவர்னரே யோசிப்பார் என சரத்பவார் காட்டமாக தெரிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அண்மையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் ஆளுநர்  முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை திடீரென மதச்சார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா? என்று கேட்டு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்கடிதத்திற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயும் பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் கவர்னர் … Read more

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தமிழகத்தில் என்ன மரியாதை இருக்கிறது? ராமதாஸ் கண்டனம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தமிழகத்தில் என்ன மரியாதை இருக்கிறது, ராமதாஸ் கண்டனம். கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் ஆளுனர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக … Read more

மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை!

மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வரிலால் மற்றும் அமைச்சர்கள் … Read more

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை அறிக்கை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் மாளிகையில் 87பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ஜூலை 28ஆம் தேதி முதல்  தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் ஆக-2 ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என … Read more

#Breaking: ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக ஆளுநர் மாளிகையில் இதுவரை 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணிநேரத்தில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் பரவும் கொரோனா, ஆளுநர் அலுவலகத்தையும் விடவில்லை. தமிழக ஆளுநர் மாளிகையில் 147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட இதுவரை … Read more

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்.! திடீரென ஆளுநரை சந்தித்த அசோக் கெலாட்.!

திடீரென ராஜஸ்தான் ஆளுநரை சந்தித்த  முதல்வர் அசோக் கெலாட். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் , துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் இடையே விரிசல்  ஏற்பட்டது. இதனால், சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனியே முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட்  மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அசோக் கெலாட் அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால், ராஜஸ்தானில்  அரசியலில்  குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் … Read more

கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வந்த வண்ணமே இருந்தது. இதனால் கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்தது. இதற்குஇடையில்  சென்னை … Read more

ஆளுநர் உரை இல்லை, அது ஆளுங்கட்சியின் உரை – ஸ்டாலின் அதிரடி டுவிட்.!

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு , ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரையின் 56பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். வருடந்தோறும்  தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் தான் இந்த வருடமும் முதல் கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. இந்த வருட முதல் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் … Read more

செய்தியாளர்கள் சந்திப்பில் கண் கலங்கிய தமிழிசை நெகிழ்ச்சி சம்பவம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்பொழுது அவர்  ஒரே தேசம் ஒரே நாடுதான் என்ற எண்ணத்தில் தெலுங்கானா செல்கிறேன் என்றும் ஆண்டவனுக்கு ஆண்டு கொண்டிப்பவருக்கும் என் மனமார்ந்த நன்றி என தெரிவித்தார் . என் மீது நம்பிக்கை கொண்டு இப்பொறுப்பை அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும்,அமித்ஷா ,தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார் அப்பொழுது அவர் எனது … Read more

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவியா ! உண்மைத்தகவல் என்ன?

மேற்குவங்கம், கேரளா உட்பட 12 மாநில ஆளுநர்களின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிய இருக்கும் புதிதாக ஆளுநர் பதவிக்கு பாஜக காட்சியைச் சார்ந்த மூத்த தலைவர்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் பொன்.ராதாகிருஷ்னன். 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் … Read more