ஜூன் 24-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்…!

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஜூன் 24-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியுள்ளார். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், … Read more

பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை?- மம்தா பானர்ஜி கேள்வி…!

புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வருக்கு இடையேயான ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர், பாஜகவினர் வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேர தாமதமாக … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி – ஜம்மு & காஷ்மீர் அரசு

ஜம்மு & காஷ்மீரில் பாமர மக்கள் பயனடையும் விதத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கொரோனா தொற்றால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் அன்பிற்குரிய உறவினர்களை இழந்து துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர், இதனையடுத்து துரதிர்ஷ்டவசமாக கொரோனாவால் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு உதவ ஜம்மு & காஷ்மீர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினரை கொரோனா தொற்றால் இழந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சிறப்பு ஓய்வூதியம் … Read more

#BREAKING : ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு.!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெறுப்பேற்கவுள்ளார். ஆனால், இந்தப் பதவியேற்பதற்கு முன் திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும். அதன்படி நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்  … Read more

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு: இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் – ஆர் எஸ் பாரதி

முதல்வர் பதவி ஏற்புக்கான அழைப்பை இன்று மாலை அறிவிப்பதாக ஆளுநர் கூறினார் என்று ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். வருகின்ற 7ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 133 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக முக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, இன்று 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் … Read more

இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்திக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்கும் உரிமையைப் பெறவுள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது. ஆனால் இந்தப் பதவியேற்புக்கு முன்னர்,கூட்டம் கூட்டி திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற … Read more

தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை உரிமை கோருகிறார் முக ஸ்டாலின்!!

தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து வரும் 7ம் தேதி எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் முக ஸ்டாலின். இதனிடையே, தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின் பங்கேற்கும் விழா குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் … Read more

இன்று ஆளுநரை சந்திக்கிறார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்…!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்திக்க  உள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்திக்க  உள்ளார். அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 2-ம் கட்ட பட்டியலை திமுக அளிக்கவுள்ளது. இந்த பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு புகார் பட்டியலை அளிக்கவுள்ளது. கடந்த 22-ம் தேதி திமுக 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது … Read more

புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்தது ஏன்?- நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதிவிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி … Read more

தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் – கிரண் பேடி

தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் என்று கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என பல்வேறு புகார்களை கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம் செய்யப்பட்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் … Read more