கூகுள் மேப்பில் புதிய வசதி.. ஒவ்வொரு தெருவையும் 360 டிகிரியில் பார்த்துக்கொள்ளலாம்…

ஒரு தெருவை 360 டிகிரியில் பார்த்துக்கொள்ள முடியும் அளவுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் மேப் நிறுவனம். முன்பெல்லாம், தெரியாத ஒரு ஊருக்கோ, தெருவுக்கோ செல்ல வழி தெரிந்த நபர்களிடம் வழி கேட்டு செல்வோம், ஆனால், தற்போதெல்லாம், ஒரு ஸ்மார்ட் ஃபோன் மற்றும், ஒரு கூகுள் மேப் அப்பிளிக்கேஷன் போதும் என்கிற நிலைமை வந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. அதனை அவ்வப்போது மெருகேற்றி கொண்டே கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், தியேட்டர், முக்கிய வழிபட்டு … Read more

இனி இந்த ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் கிடையாது?

கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்றவற்றை செப்டம்பர் 27 இல் இருந்து தடுக்க உள்ளது. பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மூன்று அல்லது நான்கு வருட பயன்பாட்டிற்குப் பிறகு புதிய போன்களுக்கு மாறுகின்றனர். சிலர் பயன்படுத்தும் போன் வீணாகும் வரை பயன்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் ஒருவராக இருந்தால் இது உங்களுக்கு  முக்கியமான பதிவாக இருக்கும். ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் … Read more

இன்று முதல் Google Maps இல் பேருந்துகளின் தற்போதைய வருகை நிலவரம்…!

டெல்லியில் உள்ள பயணிகள் இன்று முதல், கூகுள் மேப்ஸில் தற்போதைய நிலவரப்படி உள்ள பேருந்து வருகை குறித்த தகவல்களைப் பெற முடியும். கூகுள் மேப்ஸ் (Google Map) என்பது உலகில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வழி கண்டுபிடிக்க உதவும் தளங்களில் ஒன்றாகும்.ஒரு பெரிய நகர நகரமாக இருந்தாலும் அல்லது சிறிய கிராமமாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள இடங்களில் பல்வேறு இடங்களுக்கு இடையில் பயணிக்க பயனர்களுக்கு உதவ கூகுள் மேப்ஸ் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கும். … Read more

கூகுளை நம்புற பொண்டாட்டி ! என்னைய நம்பமாற்றா காவல்நிலையம் சென்ற Google Map !

இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருப்பது Google Map.இந்த செயலியால் தமிழ்நாட்டை சேர்த்த ஒரு  கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றுள்ளது . நாகப்பட்டினம், மயிலாடுதுறையை சேர்ந்த சந்திரசேகர் என்ற நபர்  கூகுள்  மேப் செயலியால் தன மனைவி தன் மீது சந்தேகப்படுவதாகவும் தங்களுக்குள் அடிக்கடி பிரெச்சனை ஏற்படுவதாக  காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் . அதில் அவர் கூறியிருப்பது கடந்த … Read more

பார்க்கிங் ஸ்லாட் எங்குள்ளது? இனி கூகுள் மேப்ஸில் பார்க்கலாம்!

பார்க்கிங் குழப்பத்தை தீர்க்க கூகுள் மேப்ஸ் புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. இது பார்க்கிங் ஸ்லாட் உள்ளதா என்பதை மட்டும் காட்டுமே தவிர அது காலியாக உள்ளதா என்பதை காட்டாது. கார் ஓட்டுவோருக்கு இருக்கும் பெரிய தலைவலி, காரை எங்கு பார்க் செய்வது என்பதுதான். பொது இடங்களில் நாம் எங்கு பார்க் செய்யலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்க, கூகுள் மேப்ஸ் ஒரு புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. கூகுள் மேப்ஸ் மூலம் அங்கு பார்க்கிங் … Read more

படைப்பாளிகளுக்கும், படிப்பாளிகளுக்கும் கூகுள் வழிகாட்டுகிறது! என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

உலகில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை சில ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ள கூகுளை பற்றி தெரியாதவரே கிடையாது. கூகுள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் பல. இதனை பல கோடி பேர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். புதுசாக குழந்தை பெற்றேடுப்பது போல தனது புது புது தொழிற்நுட்பங்களை கூகுள் அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டே வருகிறது. அதே போன்று தற்போது கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் தற்போது ஒரு சேவை வந்துள்ளது. … Read more