நெருங்கி வரும் கஜா புயல் …!ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் …!பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு ….!

சில பல்கலைகழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல்  திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் எதிரொலி …!நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து…! பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு …!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது.அதேபோல் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திலும் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல்  திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலங்க வைக்கும் கஜா நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கஜா புயலால் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. யானை பலம்கொண்ட புயலாக கருதப்படும் கஜா புயல் கடுமையாக வீசக்கூடும் என்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு இந்தியா வானிலை ஆய்வுமையம் எச்சரித்தது. இந்தனை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கஜா புயலால் ரெட் அலர்ட்  தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கஜா புயலலின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதால் புதுச்சேரி மாநிலத்தில் முன்னெச்சரிக்கையாக நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் முதலில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது … Read more

நாளை கரையை கடக்கும் கஜா புயல்..!மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…! வானிலை ஆய்வு மையம்

கஜா புயல்  நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  சென்னையில் இருந்து 490 கி.மீ தொலைவில் மற்றும் நாகைக்கு வடகிழக்கே 580 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.கஜா புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும்.புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் வரும் 15-ம் … Read more

கஜா புயல் எதிரொலி..! தனுஷ்கோடிக்கு செல்ல தடை ..!ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவிப்பு

கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுப்பு என்று ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம்  ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி கிடையாது. காற்றின் வேகத்தை பொறுத்து பாம்பன் பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதேபோல்  இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர், கடற்பரப்பில் 2 ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றும்  ராமநாதபுரம்  ஆட்சியர் … Read more

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்…!இந்திய வானிலை மையம்

கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக  இந்திய வானிலை மையம்  வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும், கஜா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.கடலூர், தஞ்சை, திருவாரூர், … Read more

கஜா புயல்…! எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் …! அமைச்சர் எம்.சி.சம்பத்

கஜா’ புயல் கடக்கும் சமயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று   அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   அமைச்சர் எம்.சி.சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கடலூரில் ’கஜா’ புயல் கடக்கும் சமயத்தில், வாகன ஓட்டிகள் முடிந்த அளவு வாகனங்கள் இயக்குவதை தவிர்த்தும், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து இல்லங்களிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ தங்கியும் ஒத்துழைப்பைஅளிக்க  கேட்டுக் கொள்கிறேன்.அதேபோல் கடலூர் மாவட்ட மக்கள், புயல் தொடர்பாக அனைத்து வித உதவிகளுக்கும் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று … Read more

நெருங்குகியது கஜா புயல்!கஜா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது …!இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னைக்கு கிழக்கே 600கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 760 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.அதேபோல்  வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும்..! இந்திய வானிலை மையம்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில்,வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறு.ம்வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.சென்னைக்கு கிழக்கே 750கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840கி.மீ. தொலைவிலும் புயல் மையம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…..! இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை..!!

கஜா புயல் காரணமாக நவம்பர் 15-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வுமண்டலம் கஜா புயலாக மாறியுள்ளது.இன்னும் இரண்டு நாட்களில் கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 90 … Read more