பத்த வச்சு பாக்ஸ் ஆபிஸை பறக்கவிட்ட “சர்தார்”.! தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

மக்கள் அனைவரும் கார்த்தி நடிப்பில் வெளியான ” சர்தார்” திரைப்படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். படம் மிகவும் அருமையாக இருப்பதால் படத்திற்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். படத்தில் கார்த்தியுடன் லைலா, ராசி கண்ணா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதையும் படியுங்களேன்- இதுதான் தீபாவளி ஸ்பெஷல்: ரசிகர்களுக்கு … Read more

ஆயிரத்தில் ஒருவன் 2-க்கு தேசிய விருது கிடைக்கும்.! ஜிவியை பாராட்டிய செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு தரமான இசையை வழங்கியவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவரது இசையில் வெளிவந்த மிகப்பெரிய தரமான படம் என்றால் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷுக்கு  தேசிய விருது கூட கிடைத்திருக்கலாம் என பலர் கூறுவது உண்டு. ஆனால், அந்த படத்தில் இசையமைத்ததற்காக ஒரு விருது கூட ஜிவி பிரகாஷிற்கு கிடைக்கவில்லை. சூரரைப்போற்று படத்தில் சிறப்பாக  இசையமைத்ததற்காக ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா … Read more

டிசம்பர் 3ஐ குறிவைத்து காத்திருக்கும் 7 திரைப்படங்கள்.!

தற்போது தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டதால், தயாரிப்பாளர்கள் OTTயை மறந்து திரையரங்கு பக்கம் பழையபடி கவனம் செலுத்தியுள்ளனர். அதில், அதர்வாவின் தள்ளி போகாதே, ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேச்சிலர் ஆகிய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன. அடுத்து, புளுசட்டை மாறனின் ஆன்டி இண்டியன், சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, அருண் விஜயின் பார்டர், விஷாலின் வீரமே வாகை சூடும் போன்ற 7 தமிழ் திரைப்படங்கள் டிசம்பர் 3ஐ … Read more

தளபதி 67 அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.!

தளபதி 67 படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார்.  தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அதன்படி, விஜயின் 66 … Read more

திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன் – GVP.!

இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.  இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தற்போது யானை, மாறன், வாடிவாசல் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுமட்டுமின்றி இடிமுழக்கம், செல்ஃபி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இடிமுழக்கம் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார். படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். ஸ்கைமன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைமான் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more

முதல் முறையாக ஜிவியுடன் களமிறங்கும் இயக்குனர் கெளதம் மேனன்.!

ஜிவி பிரகாஷின் அடுத்த திரைப்படத்திற்கான தலைப்பு முதல் பார்வையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.  இசையமைப்பாளாரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து வருவதுமட்டுமில்லாமல், மாறன், வாடிவாசல், யானை,  ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு “செல்ஃபி” என்று தலைப்பு … Read more

கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் – சூரரைப் போற்று பாடலை புகழ்ந்த அமிதாப் பச்சன்.!

சூரரைப்போற்று பாடலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் புகழாரம் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருந்த “கையிலே ஆகாசம்” ரசிகர்களை கவர்ந்து பலரது ரிங்க் டோனாக மாறியது என்றே கூறலாம். இந்த பாடலை ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி பாடியிருந்தார். மென்மையான இசையுடன் அழகான … Read more

ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாகும் நடிகை காயத்ரி.?

ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து  இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி … Read more

அசுரன் பின்னணி இசையை 8 நாட்களில் முடித்த ஜிவி பிரகாஷ்.!

அசுரன் திரைப்படத்தின் பின்னணி இசையை அமைக்கும் பணியை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் 8 நாட்களில் முடித்துள்ளாராம். இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தில் நடிகர் பசுபதி, மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, கென் கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைந்த ஜிவி பிரகாஷ்.! அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார்.  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை வைத்து … Read more