வரலாறு காணாத பனிமூட்டம்…3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.!

delhi fog

தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக சாலைகள் கண்ணுக்கு தெரியாததால் வாகன ஓட்டிககள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியான ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் என்பதால் குளிர் அதிகம் நிலவுகிறது. குறிப்பாக இமயமலையை ஒட்டியிருக்கும் மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், விமானம், ரயில், சாலைப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. … Read more

உ.பி: சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 50 பேர் காயம்!

உ.பி.யில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 50 பேர் காயம் என தகவல். உத்தரப்பிரதேசம் முழுவதும் இன்று அடர்ந்த மூடுபனி காரணமாக நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுரையா, கான்பூர் தேஹாட், கன்னோஜ், உன்னாவ் மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் … Read more

இனி இந்த வேகத்தில் தான் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்!

நொய்டா முதல் ஆந்திரா வரை செல்லக்கூடிய யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் மூடுபனி காரணமாக டிசம்பர் 15 முதல் 2021 பிப்ரவரி 15 வரை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம், மணிக்கு 80 கிலோமீட்டராக குறைக்கப்படும். கிரேட்டர் நொய்டாவில் தொடங்கும் யமுனா அதிவேக நெடுஞ்சாலை, ஆந்திரா மாநிலம், குபர்புரில் நிறைவடைகிறது. இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும் காரணத்தினால் பல விபத்துகள் நடந்துள்ளது. தற்பொழுது குளிர் காலம் தொடங்கியதால் அந்த சாலையில் மூடுபனி சூழ்ந்துள்ளதால் வாகன … Read more

சென்னை முழுவதும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி, விமான சேவை பாதிப்பு …!!

சென்னை முழுவதும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். மேலும் இந்த கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.மொரீசியஸ், கோலாலம்பூர், கொச்சி விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.  

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்கள் தாமதம் !

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடுபனி நிலவுகிறது. இதனால் மக்கள் மட்டுமன்றி நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பனியிலிருந்து ஆடுகளைக் காப்பாற்ற அவற்றுக்கு ஆடை அணிவித்துள்ளனர். டெல்லியில் குறைந்த பட்சமாக 7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவுகிறாது அடர்த்தியான பனியால் பாதை தெரியாததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றன. 45 ரயில்கள் தாமதமான நிலையில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விமானங்களும் தாமதமாகி வருகின்றன. source: dinasuvadu.com

வடமாநிலங்களை வாட்டும் கடும் குளிர், பனிப்பொழிவு- உத்தரபிரதேசத்தில் 70 பேர் பலி

  வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் தங்குவதற்கு போதுமான இடவசதி இன்றி உத்தரபிரதேசத்தில் மட்டும் கடும் குளிருக்கு 70 பேர் பலியாகி உள்ளனர்.ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் 2.1 டிகிரி செல்சியஸ் வரையிலும் தரைப்பகுதிகளில் 5 டிகிரி வரையிலும் குளிர் நிலவுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அடர்ந்த பனி காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் … Read more

நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. கேத்தி பள்ளத்தாக்கு, உதகை தலைக்குந்தா பகுதிகளில் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக, புல்வெளிகள் வெண்ணிற கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது. புல்வெளியில் படர்ந்துள்ள பனியில் நடந்துசென்று சுற்றுலாப் பயணிகள், தங்களது … Read more

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் ரயில் சேவை பாதிப்பு…!

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.இதனால் டெல்லியில் இருந்து இயக்கப்படும் 10 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் 6 ரயில்களின் நேரம் மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.இந்த கடும் பனி மூட்டத்தால் சுமார் 30 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது மத்திய ரயில்வே நிர்வாகம்.