நிலச்சரிவில் சிக்கி பெண் பலி

சிம்லாவின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலி. மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் . இதைத்தொடர்ந்து இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலுவில் திடீரென ஏற்பட்ட மேகம் வெடிப்பால் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது . வெள்ளத்தில் ஏறத்தாழ 4பேர் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சோஜ் கிராமத்திலும் மேகம் வெடிப்பு ஏற்பட்டது. இதில் 4 முதல் 6 பேர் காணவில்லை எனக்  கூறப்படுகிறது .

#Breaking:வெள்ளம் வரப்போகுது…இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கர்நாடகவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது.அதன்படி,உடுப்பி,உத்தர கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும்,ஹசன் மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே,தொடர் மழை காரணமாக கர்நாடகவில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,கர்நாடகாவில் அணைகளில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,மேட்டூர் அணைக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இதனால்,காவிரி கரையோர … Read more

குட்நியூஸ்…வெள்ள தடுப்பு பணி;ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு!

வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையில்,வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் சுற்றுச்சூழல்,நகர்ப்புற திட்டமிடல்,பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில்,திருப்புகழ் IAS குழு அளித்த அறிக்கையின் படி சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் … Read more

தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை – சு.வெங்கடேசன் எம்.பி

தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி. இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை. குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1000 கோடி அறிவிக்கிறார் பிரதமர். தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன் தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்துக்கு வருவதும் … Read more

மழை வெள்ள பாதிப்பு : முருங்கைக்காய் ஒரு கிலோ 350 ரூபாயா ….!

மழை வெள்ள பாதிப்பு காரணமாக மும்பையில் முருங்கைக்காய் ஒரு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காய்கறிகளின் விலையும் அதிக அளவில் உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக அண்மையில் தக்காளியின் விலை அதிகளவில் இருந்தது. தற்பொழுதும் மும்பையில் முருங்கை, தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றில் சில்லரை விலை ரூபாய் 80 முதல் 350 வரை … Read more

#Breaking:வெள்ள தடுப்பு பணி – முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

செங்கல்பட்டு:மழை,வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வடகிழக்கு பருவமழை காரணமாக அண்மையில் பெய்த கனமழையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.குறிப்பாக,சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனையடுத்து,தமிழக முதல்வர் மற்றும் அதிமுக,பாஜக தலைமையினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர். இந்நிலையில்,தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டிடிகே நகர்,வாணியம் குளம் பகுதியில் வெள்ள … Read more

வியட்நாம்: மழை வெள்ளத்தில் 18 பேர் மாயம்..!

வியட்நாம் நாட்டில் மழை வெள்ளத்தில் சிக்கி 18 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வியட்நாம் நாட்டில் உள்ள மத்திய பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெய்துள்ள மழையில் 780 ஹெக்டர் பரப்புள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து மக்களை மீட்டு வருகின்றனர். மேலும் இந்த … Read more

தூத்துக்குடி : மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று முதல்வர் ஆய்வு ….!

தூத்துக்குடியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று முதல்வர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, … Read more

#Breaking:மழை வெள்ள பாதிப்பு:ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

சென்னை:தொடர் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு. வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த மழையால் பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில்,மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.இதனால்,மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் நிவாரண நிதி … Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இரண்டு நாள் ரெட் அலர்ட் …!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இரண்டு நாள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கன மழையால் பல மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை … Read more