ராஜராஜ சோழன், பிரபாகரன் வரலாறு படமாகிறது.. இயக்கம் – வெற்றிமாறன்.! தயாரிப்பு – சீமான்.!

ராஜராஜ சோழன், பிரபாகரனின் “உண்மை” வரலாறு படமாகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என அறிவித்துள்ளார். … Read more

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பிறந்த தினம் இன்று…!

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டங்கோட்டை எனும் ஊரில் பிறந்தவர் தான் தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் டி எஸ் பாலையா. இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் துறையில் தலைசிறந்த நடிகராக விளக்கியுள்ளார். 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். இவர் ஆரம்ப … Read more

முழு படத்தை ஒரு வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா..!

ஒரே வாரத்தில் முழு படத்தையும் நடிகை ஹன்சிகா நடித்து முடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஹன்சிகா தற்போது ‘105 மினிட்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜா துஷ்ஷா இயக்கியுள்ளார். இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா ஆகிய மொழிகளில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. … Read more

நடிகர் சசிகுமார் படத்தில் இணைந்த பிரபல பிக்பாஸ் நடிகை சம்யுக்தா..!

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பிரபலம் அடைந்த நடிகை சம்யுக்தா தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமார் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான். மேலும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கவுள்ளார். இந்த படம் அதிக பொருட்செலவில் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. இதில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ்ஸில் பங்கு கொண்டு தற்போது பிரபலம் அடைந்த நடிகை … Read more

திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், தற்போது வரும் 28-ம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த முறை மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 100 நபர்கள் மட்டும் பணி … Read more

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் உண்மை சம்பவம் கலந்த ப்ளூ இன்க்

இயக்குனரும் நடிகையுமாகிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தற்பொழுது ப்ளூ இங்க் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை எனும் வாழ்வியல் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நடிகை மற்றும் இயக்குனர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகையாக அல்லது இயக்குனராக பிரபலமானதை … Read more

ஹிந்தி பிரமாண்ட பட்ஜெட் படத்தில் சியான் விக்ரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

  இந்திய சினிமாவில் சியான் விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் நடிப்பில் இந்த வாரம் “ஸ்கெட்ச்” படம் திரைக்கு வரவுள்ளது.இதை தொடர்ந்து துருவ நட்சத்திரம், சாமி2 என பிஸியாக இருக்கும் இவர் ராவணன் படத்திற்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிக்க உள்ளார்.இப்படத்தை ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ளார், படத்திற்கு “மஹாவீர் கர்ணா” என்று தலைப்பு வைத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் சரித்திரக்கதையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.    

காஜல் அகர்வாலின் தற்போது வெளியான டாப்லெஸ் புகைப்படம்…

சென்னை: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால் தற்போது காஜல் அகர்வாலின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.இவர் தமிழ் படங்களில் தளபதியுடன் மெர்சல் மற்றும்  தலயுடன் விவேகம் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் க்வீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் இவர்  எம்.எல்.ஏ. என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.இவர்  பல ஆண்டுகள் கழித்து தனது முதல் ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல். இந்நிலையில் காஜலின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று … Read more

‘சவரகத்தி’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்…!

  இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுமகாகும் படம் ‘சவரக்கத்தி’. இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா நடிக்கும் இப்படத்தில் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். கிராம பின்னணியில் உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.