ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து தொடரில், முதல் சிவப்பு அட்டை எச்சரிக்கை நேற்று நிகழ்ந்தது. ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் 3-வது நிமிடத்தில் கோல் நோக்கி வந்த பந்தை கையால் தடுத்ததால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார். இந்த உலக கோப்பையில் சிவப்பு அட்டையை பெற்ற முதல் வீரரான கார்லோஸ் சாஞ்சஸ், அடுத்த போட்டியில் விளையாட முடியாது. உலக கோப்பை வரலாற்றில் காட்டப்பட்ட 2-வது அதிவேக […]
இன்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் தொடங்குகின்றன. இரண்டு கண்டங்களில் முதல்முறையாக நடைபெறும் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடரை, நடப்பு ஆண்டில் ரஷ்யா முதன்முறையாக ஏற்று நடத்துகிறது. இந்த போட்டித் தொடரை நடத்த இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் ரஷ்யாவில் மாஸ்கோ, சோச்சி, பீட்டர்ஸ்பர்க், கஸான் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் […]