திருவிழாவில் 5 வயது உட்பட்ட 90 குழந்தைகள் வாந்தி ,மயக்கம்

சித்திரை மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல கோவில்களில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரியில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் வானகிரி சுற்றி உள்ள கிராம மக்கள் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த திருவிழாவில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட அனைத்து குழந்தைகளும் வாந்தி,மயக்கம்ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு … Read more

கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கின…!!

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா முன்னேற்பாடு குறித்து இலங்கை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 15-16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.அந்த திருவிழாவிற்கு ஆண்டுதோறும் இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும்அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள் இந்தியாவிக்கு சொந்தமான கச்சத்தீவு 1975 ஆம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் அன்று முதல்  இலங்கை அதிகாரிகள் திருவிழா நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் திருவிழாவிற்கான கடல் போக்குவரத்து, உணவு, தங்கும் இடம், சுகாதாரம், படகு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து … Read more

வேளாண் திருவிழாவை முன்னிட்டு கோவையில் ரேக்ளா பந்தயம்

கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றன. கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. 200க்கும் மேற்பட்ட ரேக்ளா வாகனங்கள் போட்டியில் பங்கேற்று சீறி பாய்ந்தன. 100 மீட்டர், 200 மீட்டர் தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 4 பேர் விடுவிப்பு?

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர், பொங்கல் பண்டிகையையொட்டி விடுவிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. கைதானவர்களை 3 நாட்கள் காவலில் அடைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதிக்கு பிறகு, நான்கு மீனவர்களும் … Read more

16 வகையான காய்கறி சேர்த்து செய்த பொங்கல் விருந்து…!!

பொங்கல் திருநாளை தமிழர் விழா_வாகவும் ,  தமிழர் தேசிய விழாவாகவும் பலர் கொண்டாடி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கம் இருந்து வருகின்றது . குறிப்பாக இந்து , கிறிஸ்து மற்றும் முஸ்லீம்_ களும் கொண்டாடி வருகின்றனர். கிருத்துவ மதத்தினர் பொங்கல் பண்டிகைக்கு தங்களின் தேவாலயங்களில் கரும்பு வைத்து கொண்டாடி வருகின்றனர் . தமிழக முஸ்லீம் மக்கள்_கள் பொங்கலன்று தங்களுடைய வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுகின்றனர். குறிப்பாக 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பது வழக்கமாக இருந்து வருகின்றது.

புது பானையில் பொங்கல் கொண்டாட்டம்…!!

பொங்கல் விடும் போது  புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என எல்லாமே எல்லாமே புதுசாக தான் இருக்கும். பொங்கல் விடும் போது சிலர் வீட்டிற்கு வெளியே பொங்கல் வைப்பார்கள், சிலர் வீட்டு முற்றம் அல்லது வராண்டாவில் பொங்கல் வைப்பார்கள். பொங்கலுக்கு மண் பானையைத்தான் அதிகமானோர்  பயன்படுத்துவார்கள். வசதி உள்ளவர்கள் வெங்கலப் பானையை பயன்படுத்துவார்கள். பொங்கல் விடும்  போது மொத்தம் இரண்டு அடுப்புகளில் பொங்கல் செய்வார்கள், ஒன்று வெண் பொங்கலுக்கு மற்றொன்று சர்க்கரை பொங்கலுக்கு. பொங்கல் பொங்கும் போது “பொங்கலோ… பொங்கல்…” என்று … Read more

நீலகிரி மாவட்டதில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற ”மோர்ட்வத்” திருவிழா..!!

புத்தாண்டை வரவேற்கும் விதமாக தோடர் இனத்தை சேர்ந்த ஆண்கள் கொண்டாடிய ”மோர்ட்வத்” என்று அழைக்கப்படும் வினோத திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம் தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்தில் புத்தாண்டு திருவிழாவை தோடர் இன மக்கள் சிறப்பாக கொண்டாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டு, முன்போ என்றழைக்கப்படும் கூம்பு வடிவிலான குல தெய்வ கோயிலில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து காணிக்கை செலுத்தி, தங்களுடைய … Read more

24 ஆண்டுகளாக நடைபெற்று வரும் துபாய் ஷாப்பிங் திருவிழா கொண்டாட்டம்…!!

துபாயில் உலகப் புகழ் பெற்ற ஷாப்பிங் திருவிழா தொடங்கியுள்ளது. 24 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திருவிழா இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை 39 நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவில், ஷாப்பிங் செய்பவர்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுமார் 3200 கடைகளில் 700 வகையான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. துபாய் ஷாப்பிங் திருவிழாவின் போது பொதுமக்களை மிகவும் கவர்ந்த வான வேடிக்கை நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு துபாய் … Read more

களைகட்டத் தொடங்கிய ஹோலி(Holi) பண்டிகை!

ஆயிரக்கணக்கான விதவைப் பெண்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியில்  தங்கள் வெள்ளையாடையின் மீது வண்ணங்களைப் பூசிக் கொள்ளத் துணிந்தனர். வண்ணங்களின் விழாவான ஹோலிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய அவர்கள் சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து தங்கள் வெள்ளைப் புடைவைகளை வண்ணமயமாக்கினர். ஆடல் பாடல் கொண்டாட்டம் என்று வடமாநிலங்களில் ஹோலிப் பண்டிகை களைகட்டத் தொடங்கி விட்டது. நாடு முழுவதும் நாளைய தினம் ஹோலி கொண்டாடப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மத்திய அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக சமஸ்கிருத பாடல்…??

சென்னை ஐஐடியில் நடைபெற்ற மத்திய அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் வாழ்த்து பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சமஸ்கிருத பாடலான ‘ மகா கணபதி ‘ வாழ்த்து பாடல் ஒலிப்பரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.