#Breaking:அதிமுக அலுவலகம் வந்த ஓபிஎஸ்;கழகத்தின் காவலரே,ஒற்றை தலைமையே என முழக்கமிட்ட தொண்டர்கள்!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு,சென்னை,அதிமுக தலைமை அலுவலகத்தில் 3-வது நாள் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதன்படி,பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. இந்தா பரபரப்பான நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.தனது இல்லத்தின் முன் ஆதரவாளர்கள் குவிந்திருந்த நிலையில்,தற்போது ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.மேலும்,தனது ஆதரவு … Read more

#Breaking:அதிமுக அலுவலகத்தில் தீர்மானக் குழுவினர் முக்கிய ஆலோசனை!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. அந்த வகையில்,நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்:”பிரதமர் மோடி வலியுறுத்தியதால்,முன்னதாக அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டேன் என்றும் துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.இதனிடையே,சேலம் சென்றிருந்த இபிஎஸ்-யும்,அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானக் … Read more

#BREAKING : ஒற்றை தலைமை – அம்மாவுக்கு செய்யும் துரோகம் : ஓபிஎஸ்

ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கு என பிரதமர் மோடி பேட்டி.  அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்த ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. … Read more

ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம்:ஓபிஎஸ்,ஈபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை – தலைமைக் கழகம் அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு மற்றும் கூட்டம் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது என்று அதிமுக தலைமை முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்களுடன் இன்று (ஜூன் 14 ஆம் தேதி) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர் என … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம்;ஜூன் 14 ஆம் தேதி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆலோசனை – தலைமைக்கழகம் அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு மற்றும் கூட்டம் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது என்று அதிமுக தலைமை முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,பொதுக்குழு கூட்டம் தொடர்பான அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர் … Read more

ஆன்லைன் சூதாட்டம் – தடை செய்ய இதை விடவா இந்த அரசுக்கு காரணிகள் தேவை? – ஈபிஎஸ்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என ஈபிஎஸ் ட்வீட்.  ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று … Read more

இந்த விடியா ஆட்சியாளர்கள் தமிழகத்தை பிரித்து மேய தொடங்கி இருக்கிறார்கள் – ஈபிஎஸ்

நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை பயன்பாட்டு மாற்றம் செய்யும் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்.  நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை பயன்பாட்டு மாற்றம் செய்யும் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பத்து ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள இந்த விடியா ஆட்சியாளர்கள், காய்ந்த மாடு கம்பம் கொல்லையில் பாய்ந்தது போல, தமிழகத்தை பிரித்து மேயத் தொடங்கி இருக்கிறார்கள். … Read more

அண்ணாமலை பிறந்தநாள் – ஓபிஎஸ், ஈபிஎஸ் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ், ஈபிஎஸ். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் … Read more

#Breaking:சற்று முன்…அதிமுக செயற்குழு கூட்டம் எப்போது? – ஓபிஎஸ்,ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு!

வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக,கூட்டாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு,சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு … Read more