என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் கதாநாயகனாக தனுசும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாசும் நடிக்கிறார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் 2016-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து வருகிற 26-ம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.