யானை மீட்கும் பணி : படகு கவிழ்ந்ததில் செய்தி தொடர்பாளர் பலி!

யானை மீட்கும் பணியை ஒளிப்பதிவாக்க சென்றிருந்த பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் படகு கவிழ்ந்தால், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் எனும் பகுதியின் அருகில் உள்ள மகாநதியில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நதியின் நடுப்பகுதிக்கு சென்று மீண்டும் கரைக்கு வர முடியாமல் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது. இதனை அடுத்து ஒடிசா பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் … Read more

பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை..!பயணிகளின் திக் திக் நிமிடங்கள்..!வீடியோ

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மேல்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்துள்ளது. இதனால் செய்வதறியாது, ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதன் பின்னர் பேருந்தை நோக்கி காட்டு யானையும் வேகமாக துரத்தி வந்துள்ளது. துரத்தி வந்த காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடியை … Read more

இனிமேல் “யானைகளை” தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது – ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் தனி நபர்கள் யானைகள் வைத்திருக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என்று கோவில் யானைகள் பராமரிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், கோயில் யானைகள், வளர்ப்பு யானைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக … Read more

காட்டு யானையுடன் செல்பீ எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை…!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் யானையுடன் செல்பீ எடுக்க முயற்சித்த பொழுது, யானை மிதித்ததால் உயிரிழந்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள மகாசாமந்த் எனும் பகுதியை சேர்ந்த அரசு சுகாதார ஊழியர் அஜய் திவாரி என்பவர் நேற்று முன்தினம் பணி முடிந்து காட்டு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் ஒரு யானை கூட்டம் சாலையை கடந்து செல்வதை கண்டு ஆர்வத்துடன் அந்த யானை கூட்டத்தை பின்தொடர்ந்து செல்பீ எடுக்க முயற்சி செய்துள்ளார். இவரைப் … Read more

நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழப்பு…!

கிருஷ்ணகிரியில் நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கியதில், இரவு நேர காவலுக்கு நின்ற இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எனும் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் சிலர் அண்மையில் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலப்பள்ளி எனும் கிராமத்தை சேர்ந்த, 30 வயதுடைய சந்திரன் மற்றும் நேரலகிரி எனும் கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய நாகன் … Read more

அசாமில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு – 2 பேர் கைது…!

அசாம் மாநிலத்தில் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் எனும் மாவட்டத்தின் மிர்சா எனும் பகுதியில் நெல் வயலைச் சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த மின்சார வேலியில் உரசிய யானை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை இந்த யானை உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு … Read more

கேரளாவில் யானை தாக்கி இருவர் பலி..!

கேரள மாநிலம் திரிச்சூரில் யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர். திரிச்சூரில் உள்ள பலப்பிள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சைனுதீன்(50). இவரை நேற்று இரவிலிருந்து காணவில்லை என்பதால் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இவரது உடல் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள கணபதி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த மேலும் ஒரு நபரான பீதாம்பரம் விடியற்காலை 5.30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். ரப்பர் தொழிலாளியான இவர் 6.30 மணியளவில் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த இருவரின் … Read more

கடந்த 7 ஆண்டுகளில் காட்டு யானை தாக்குதலால் 3,310 பேர் உயிரிழந்துள்ளனர்..!

கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் காட்டு யானை தாக்குதலால் 3,310 பேர் உயிரிழந்துள்ளதாக வன, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த ஆர்டிஐ பிரச்சாரகர் கோவிந்தன் நம்பூதிரி அவர்கள் கடந்த 7 ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காட்டு யானை தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கேட்டுள்ளார். இது குறித்து வன, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 7 ஆண்டுகளில் … Read more

சீனாவின் புகழ்பெற்ற யானைக்கூட்டம் சொந்த வசிப்பிடத்தை நெருங்கியது..!

உலகளவில் ஈர்க்கப்பட்ட சீனாவின் புகழ்பெற்ற யானைக்கூட்டம் தற்போது அதன் சொந்த வாழிடத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் வசித்து வந்த 15 யானைகள் கடந்த ஜூன் மாதத்தில் அதன் வாழ்விடத்திலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சுற்றி திரிந்து வந்தது. இந்த யானைக்கூட்டம் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நடமாட தொடங்கியது.  யானைக்கூட்டங்கள் ஒன்றாக சுற்றி திரிந்து பல விளைநிலங்களை சேதப்படுத்தவும் செய்தது. மக்கள் வாழ்விடங்களில் புகுந்து பல சேட்டைகளும் செய்தது. … Read more

சீனாவில் யானைகள் புலம்பெயருவதற்கு ஏதுவாக 1,50,000 பேர் வெளியேற்றம்!

சீனாவில் யானைகள் புலம் பெயருவதற்கு எதுவாக 1,50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவிலுள்ள யுனான் மாகாணத்தில் சுற்றித் திரியக் கூடிய 14 ஆசிய காட்டு யானைகள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு யுவான்ஜியாங் ஆற்றங்கரையை கடந்து சென்றது. இந்த யானைகள் நகர்ந்து செல்வதற்கு ஏதுவாக 1,50,000 குடியிருப்பாளர்களை வெளியேற்றி உள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த 14 காட்டு யானைகளையும் கண்காணிக்கும் வகையில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஏராளமான வாகனங்கள் … Read more