5 மாநில தேர்தல்.! நவம்பர் 7 முதல் தேர்தல்.. டிசம்பர் 3இல் ரிசல்ட்.! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

stateelection2023

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதற்கு முன்னதாக நாட்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியானது. இந்த நிலையில்,  சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான … Read more

5 மாநில தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்!

election2023

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா கூட்டணியை சேர்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு கூட்டங்களை நடத்தி வியூகங்களை வகுத்து வருகிறது. இதுபோன்று, மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்த பேச்சுவார்த்தையை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் … Read more

தேர்தல் அதிகாரி கடிதம் – திருப்பி அனுப்பிய அதிமுக அலுவலகம்!

தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகு அனுப்பிய கடிதத்தை பெற்றுக்கொள்ள மறுத்து அதிமுக தலைமை அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தை பெற மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி … Read more

அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை குறிப்பிட்டு அதிமுகவுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு மாநில தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 16-ல் அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை … Read more

இவர்களுக்கு ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் – தேர்தல் ஆணையம் முடிவு!

ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது தலைமை தேர்தல் ஆணையம். புலம்பெயர் தொழிலாளர்களும் வாக்கு செலுத்தும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். நாட்டில் 30 கோடிக்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி உள்ளாட்சித் தேர்தல்! நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.  டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதை , டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்தது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 130க்கும் இறப்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றியை பதிவு செய்தது. … Read more

தேர்தல் நன்கொடை – ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம்!

தேர்தல் நன்கொடையாக 7 தேசிய கட்சிகள் மொத்தமாக ரூ.778.7 கோடியாக பெற்ற நிலையில், ரூ.614.50 கோடி பெற்றுள்ளது பாஜக. தேசிய கட்சிகள் பட்டியலில் நடப்பாண்டில் தேர்தல் நன்கொடையாக ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம் பிடித்துள்ளது. நடப்பாண்டில் 7 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்துள்ளது. தேர்தல் நன்கொடையாக 7 தேசிய கட்சிகள் … Read more

ஒரே நாளில் தேர்தல் ஆணையர் நியமனம் – உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

தலைமை தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது என உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது. புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து … Read more

சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை, கரூர், சேலம் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில், சுமார் 17 .69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் … Read more

#BREAKING: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு. சென்னையில் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் … Read more