திமுக ஆட்சியில் கல்வி, விவசாய கடன்கள் தள்ளுபடி – மாணவியின் கேள்விக்கு ஸ்டாலின் வாக்குறுதி.!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் முக ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஒவ்வொரு பக்கம் அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முதல் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று … Read more

நான் இன்று முதல்வராக இருக்கலாம் , நாளை நீங்களும் கூட ஆகலாம் – முதல்வர் பழனிசாமி பேச்சு

சில புல்லுருவிகள் அ.தி.மு.க.வை வீழ்த்த நினைத்தன, அவர்களின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், சில புல்லுருவிகள் அ.தி.மு.க.வை வீழ்த்த நினைத்தன, அவர்களின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது. அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள். இன்று நான் முதல்வராக இருக்கலாம்,பன்னீர்செல்வம் முதல்வராகலாம், நாளை நீங்களும் கூட ஆகலாம். இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சராகக் கூடிய ஒரே … Read more

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் – கே.பி.முனுசாமி பேச்சு

50 ஆண்டு காலமாக எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிடமுடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியுள்ளது.இந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசுகையில் ,அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். இந்திய துணைகண்டத்தில் தமிழகத்திற்கு தனி வரலாறு உண்டு. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையை நிலையாட்டியவர் பெரியார். தொடர்ந்து பெரியாரால் பாடம்புகட்டப்பட்டவர் அறிஞர் அண்ணா.ஜெயலலிதா, … Read more

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் – தொடங்கியது அதிமுக பிரசார பொதுக்கூட்டம்

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக பிரசார பொதுக்கூட்டம்  தொடங்கியது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ,அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியுள்ளது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த … Read more

எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி.!

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி. 2021-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. அதிமுக – திமுக இடையே எப்போதும் வழக்கம்போல நேரடி போட்டி நிலவி வருகிறது. சில கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. இதனிடையே, நேற்று சேலத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, இன்று முதல் … Read more

அசாமில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் பிரதமர் மோடி…!!

அசாம் மாநிலத்தில், மக்களவை தேர்தல் பரப்புரையை  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார். மக்களவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அசாமில் பிரதமர் மோடி பரப்புரையை  இன்று தொடங்குகிறார். சிலிசார், நெளகான் பகுதிகளில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். மணிப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் துவக்கி  வைக்க இருக்கிறார். அம்மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த பொதுத்தேர்தலில், 7 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெற்றது … Read more