ஏப்ரல் 4-ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி – தலைமை தேர்தல் அதிகாரி

ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுமதி வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி … Read more

தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்

தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போடிநாயகனுரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறி கொண்டிருக்கிறார். உள் ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என கூறுகிறார். முதல்வருடன் தொலைபேசியில் பேசிய போது உள் ஒதுக்கீடு நிரந்தரமானது தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார் என முக ஸ்டாலின் பரப்புரையில் விமர்சித்து பேசியுள்ளார். இதனிடையே, நேற்று பிரபல நாளிதழ் … Read more

அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது – முக ஸ்டாலின்

சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் அதிமுக ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா? என முக ஸ்டாலின் பேச்சு. வேலூர் மாவட்டத்தில் இன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏதோ தேர்தலுக்காக மட்டும் வரும் ஸ்டாலினாக நான் வரவில்லை, எப்பொழுதும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் … Read more

திமுகவினர் பெண்களை கீழ்த்தரமாக பேசுகிறார்கள் – முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு

திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி,  திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பெண்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி பேசுவதாக கூறி, தேர்தல் பரப்புரைகளில் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசும் திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்று பெண்களை தரக்குறைவாக பேசும் பேச்சாளர்களை எல்லாம் தட்டி கேட்க தைரியம் இல்லாத … Read more

பணமூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் – டிடிவி தினகரன்

தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் பணமூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு அடையாளம் காட்டியது தேனி மாவட்டம். தஞ்சாவூர் எப்படி எனது சொந்த மாவட்டமோ, அதேபோன்று இதுவும் எனது சொந்த மாவட்டம் தான் என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் … Read more

அதிமுக வென்றால் மோடி முதல்வர், அமித்ஷா துணை முதல்வர் – திருமாவளவன்

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினால் மோடியை முதல்வராக்குவதாகவே பொருள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாபநாசத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினால் மோடியை முதல்வராக்குவதாகவே பொருள். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் அல்ல, அமித்ஷா தான் துணை முதல்வர் என விமர்சித்துள்ளார். மேலும் பாஜக, அதிமுக பற்றி மக்கள் நீதி மய்யம், நா.த.க., அமமுக உள்ளிட்ட கட்சிகள் பேசுவதே கிடையாது … Read more

எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழ்தான் வாக்கு – சீமான்

எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழ்தான் வாக்கு விழும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரங்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அனிதா பர்வீனை ஆதரித்து, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தங்கள் இனத்தை அழித்தது என்றும் பாஜக மனிதகுல எதிரி எனவும் தெரிவித்துள்ளார். அதனால் இந்த இரண்டு கட்சிகளையும் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றும் … Read more

#BREAKING: கொரோனா விதிமுறைகள் – கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை

கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். தேர்தல் பரப்புரை, வாக்குபதிவின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பரப்புரையின்போது கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த … Read more

திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரை கொடுக்கவும் தயார் – முதல்வர் பழனிசாமி ஆவேசம்

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே தனது லட்சியம் என்று பரப்புரையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பிரச்சாரத்தில் எதிர்கட்சியான திமுகவை விமர்சிக்கும் வகையில் உள்ளது. அதிமுக அரசின் சாதனை திட்டங்களை பட்டியலிடும் சில நேரங்களில் எதிர்கட்சியினருக்கு எதிராக ஆவேசமான கருத்துகளை முன் வைத்தும் பிரசாரம் செய்து வருகிறார். அந்தவகையில் இன்று காலை திருப்பத்தூர் தொகுதியில் மருது அழகுராஜை ஆதரித்து … Read more

“வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்” – எம்ஜிஆர் பாடலைபாடி அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்.!

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற எம்ஜிஆர் பாடலைபாடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார். ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் சாலையோர கடைகளில் டீ குடித்தும், மேளம் அடித்தும் மற்றும் குடத்தில் தண்ணீர் பிடித்து நூதன முறையில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று பிரச்சாரத்தின்போது எம்ஜிஆர் பாடலை பாடினார். தம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களுக்கு சவால்விடும் வகையில் வெற்றி … Read more